பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566

கலைஞர் மு. கருணாநிதி


566

கலைஞர் மு. கருணாநிதி "ஆமாம், முன்பே உன்னைக் கேட்க நினைத்தேன். அகஸ்டஸ் பெருமகனார் ஏன் இப்படித் திடீரென்று எழுந்து போனார்? உண்மை யிலேயே அவருக்கு உடல் நலம் இல்லையா?” "உங்களுக்குத் தெரியாதா? சில ஆண்டுகளாகவே அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறது. அதுவும் தம் தங்கை ஆக்டேவியாவின் மகன் மார்செல்லஸ் இளவயதில் இறப்பைத் தழுவியதும் அவர் உடம்பு மிகவும் கெட்டுவிட்டது. தமக்குப் பின்னர் அந்த மார்செல்லஸ் தான் ஆட்சித் தலைவராக வரவேண்டும் என்று அவர் பெரிதும் கனவு கண்டு இருந்தார். எனவே அவரது இறப்பு இவருக்குத் தாங்கொணாத இடியாகிவிட்டது. இப்போது வெளித் தோற்றத்தில்தான் அவர் இரும்புக் கோட்டை; உள்ளூரவோ உளுத்த மூங்கில் உடலைப் பொறுத்தமட்டில் தான் இப்படி உரைத்திடலாமே யன்றி அவருடைய உள்ளம் எப்போதுமே வைரம்தான்; உறுதி - உயர்நோக்கு - எல்லாவற்றிலுமே வைரம்தான்!” ஜூனோ இவ்வாறு உரைத்திடும் பொழுதே மேசனஸ், அவர்களுக்கு அருகினில் வந்திட்டார். "நான் இவரைப்பற்றிக் கூறியது இவர் காதில் விழுந்திருக்குமோ? அதற்காக வம்பு செய்யத்தான் வந்திருப்பாரோ?" என்னும் அச்சம் படர்ந்திடாமல் இல்லை அந்த அழகுக் கிள்ளையின் முகத்தினில்! அவரோ செழியனை நோக்கி. "என்ன தூதுவர் அவர்களே! உங்களை மாபெரும் வீரர் என்கிறார்களே? அதோ கீழே மல்லர்களை வீழ்த்திக் கொண்டிருக்கிறதே அந்தக் காண்டாமிருகம், அதனை நீங்கள் ஏன் அடக்கிடக்கூடாது? அதன் மூலம் இங்கே உங்கள் வீரத்தினையும் நீங்கள் ஏன் நிலைநாட்டிடக்கூடாது?" என்றார். மேசனசின் இந்தக் குத்தலான சொற்களைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள் ஜூனோ. ரோமாபுரிப் பேரரசு முழுவதிலுமே 'இலக்கிய வட்ட ஏந்தல்' என்றும், 'அரசியல் புலி' என்றும் பெரும் புகழினைப் பெற்றுள்ள மேசனஸ் தன்னைப் பார்த்து பகர்ந்தவற்றை ஜூனோ ஏன் உடனே மொழிபெயர்த் திடாமல் உதடுகளை மூடிக்கொண்டு விட்டாள் என்பது செழியனுக்கு விளங்கிடவில்லை. இவள் முகம் கூட ஒருமாதிரியாக வெளிறிவிட்டதே. ஏன்?' என்று எண்ணிய அவன் அவளை நோக்கி, “இந்தப் பெரியவர் என்ன சொல்கிறார்?" என்று வினவினான். ம்.. நீங்கள் அந்தக் காண்டாமிருகத்தோடு சண்டை போட வேண்டுமாம்" - பல்லிடிக்கில் பகர்ந்திட்ட ஜூனோ "ஆனால் நீங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாதீர்கள்!" என்று எச்சரிக்கவும் செய்தாள்.