பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

569


ரோமாபுரிப் பாண்டியன் 569 என்றால், அவளுடைய வயிற்றிலே பிறந்திடும் என்போன்ற தமிழ் இளைஞர்களுக்கு இந்த விலங்குகளெல்லாம் எந்த மூலை? கால் தூசு மாதிரி!" என்று வீரங் கொப்பளித்திடும் சொற்களைக் கொண்டு சோகங் கப்பிடும் அந்தச் சுந்தரவல்லிகளுக்கு தேறுதல் மொழிந்திட்டான் செழியன். ஜூனோவின் அச்சம் - நடுக்கம் -அழுகையினை அகற்றிடுவது அத்துணை எளிதாக இல்லை. 'இந்த நாட்டுக் காண்டாமிருகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரி யாது; அதிலும் இன்று வெறிபிடித்து நிற்கும் அது மிகவும் பொல்லாதது; எத்தனையோ மல்லர்களைக் கொன்று குவித்தது. அதனிடம் போய் உங்கள் உயிரை ஏன் அநியாயமாகப் பலியிட வேண்டும்? எனக்கு அப்போதே தெரியும் மேசனஸ் ஏதாவது இப்படி செய்வார் என்று. அகஸ்டஸ் பெருமகனாரிடமும் ரோமாபுரி மக்களிடமும் நீங்கள் பெற்றுள்ள செல்வாக்கை கண்டு அவருக்கு வயிற்றெரிச்சல்; அந்தப் பொறாமையினால் தான் உங்களைத் தீர்த்துக் கட்டிடவே இப்படிச் சூழ்ச்சி செய்கிறார் மேசனஸ்! அந்த மிருகத்தோடு சண்டை போடப் போகாதீர்கள்! உங்களுக்கு ஏதாவது என்றால்... பிறகு... நான்-" தேம்பித் தேம்பியே கூறிவந்திட்ட ஜூனோவுக்குச் சட்டென்று தொண்டையே அடைத்துக் கொண்டு விட்டது! "உன்னுடைய உள்ளன்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்; என்றாலும் நீ இவ்வளவு கோழையாக இருந்திடக் கூடாது. எனக்காக நீ அழுவதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? உன்னையே தவறாகக் கருதிடமாட்டார்களா? எனவே, உடனே உன் விசும்பலை நிறுத்து! நான் எத்தனையோ சூழ்ச்சிகளையெல்லாமல் எதிர்ப்பட நேர்ந்தவன்; எதிர்நீச்சல் அடித்தவன், இந்த மேசனசின் சூழ்ச்சியை மட்டும் என்னால் முறியடித்திட முடியாதா? அவருக்கு என் மீது பொறாமை என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே! நெருப்புச் சூடுபட்டுப் பாகு கரையலாம்; ஆனால் பாறை கரைந்திடாது; அப்படித்தான் ஒருவருடைய அழுக்காற் றின் காரணமாக இன்னொருவருடைய ஆற்றல் அவிந்திடாது; செல்வாக் கும் தேய்ந்திடாது. ஆகவே என்னைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு நீ மகிழ்ச்சியோடு நான் போடப் போகும் சண்டைகளைக் கவனித்துப் பார்!' என்ற செழியன், மிடுக்கோடு அந்த இடத்தைவிட்டு அகன்றிட்டான். சற்றைக்கெல்லாம் அந்த வட்டக் கலையரங்கத்தின் அடித்தளத் திலே புழுதி கிளம்புகிறதா, புகைதான் எழும்புகிறதா என்று இனம் பிரித்திட முடியாதவாறு தூள் பறந்திட்டது.