பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570

கலைஞர் மு. கருணாநிதி


570 கலைஞர் மு. கருணாநிதி மதங்கொண்ட யானை என்பார்களே அப்படித்தான் திமிர் ஏறிய அந்தக் காண்டாமிருகம் வெறியாட்டம் ஆடிற்று; செழியனைப் பாய்ந்து பாய்ந்து தாக்கிற்று. தமிழினத்தின் தனிப்பெருந்திருநாளாம் பொங்கற் பெருவிழாவின் போது எத்தனையோ ஏறுதழுவுதல் விளையாட்டுக்களிலெல்லாம் மற்றவர்களால் அடக்கமுடியாத காளைகளைக்கூட அடக்கிக் கைதேர்ந் தவன் செழியன்! அந்தத் துணிச்சலிலேயே இந்தக் காண்டாமிருகத் தையும் வீழ்த்திடலாம் என்னும் நம்பிக்கை உண்டாயிற்று அவனுக்கு. ஆனால் அந்தக் காளைகளைவிடக் கொழுத்துப் பருத்திட்ட அதற்கு வலிமை மிகுதி என்பதனைப் பொருதமுற்பட்ட பின்னரே புரிந்துகொள்ள முடிந்தது அவனால். தொடக்கத்தில், அவன் சற்றுப் பின்வாங்கிடும்படி நேர்ந்திட்டது. அதனைக் கண்டு, பார்வையாளர்கள் கேலியாக நகைக்கவும் செய்திட்டனர். நேரம் செல்லச் செல்ல பின்வாங்கிக் கொண்டிருந்த செழியன் முன்னேறிடத் தலைப்பட்டான். தன் திறமை - தந்திரம் எல்லாவற்றையும் ஒருங்கு திரட்டித் தன் பலங்கொண்டமட்டும் அவ்விலங்கோடு மல்லாடினான்; வெட்டுக் கிளியினைப்போல் ஒரே தாவாகத் தாவிப் பறந்து அதன் முதுகின் மேல் ஏறி நின்று வேடிக்கைகள் சிலவும் புரிந்திட்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் ஆண்மையிற்சிறந்த அந்தத் தமிழ் மறவனின் வலிமை மிகுந்த நெடுங்கரங்களின் கிடுக்கிப் பிடியிலே சிக்குண்டு, அந்தக் காண்டாமிருகத்தின் தொளதொளப்பான பெருங் கழுத்துத் துவண்டு நெரியுண்டது. புயலின்போது புளியமரம் சாய்ந்திடு வது போல 'மடார்' என்று தரையிலே வீழ்ந்திட்ட காண்டாமிருகம் மீண்டும் தலை தூக்கிடவே இல்லை!