பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572

கலைஞர் மு. கருணாநிதி


செழியன் இவ்வாறு வெற்றி கொண்டதும், அந்த வட்டக் கலையரங் கத்திலே எதிரொலி எழுப்பிய ஆரவாரங்களுக்கு எல்லையே இல்லை. ரோமானியர்கள் அத்தனை பேருமே தத்தம் இருக்கையை விட்டுத் துள்ளிக் குதித்தனர்; "செழியன் வாழ்க! செழியன் வாழ்க! வெற்றி பெற்ற தமிழகத் தூதுவருக்கு வணக்கம் செய்வோம்...!" என்றெல்லாம் தங்கள் மொழியினில் தொண்டை கிழிய முழங்கினர். ஜூனோவுக்கோ கால்கள் தரையில் பாவிடவில்லை. இன்பப் பூரிப் பிலே மிதந்தவளாக - இல்லை - பறந்தவளாக அவனை வாழ்த்தி வர வேற்றிட அடித்தளத்தினை நோக்கி ஓடினாள். ...ஆனால், அங்கே செழியனைக் காணோம்! 'அதற்குள் எங்கே மாயமாய் மறைந்திட்டார்?' என்று எண்ணிய அவள், மற்போர்க் களத்தின் வாயிற்புறத்தே நின்றிட்ட ஒரு மல்லனைப் பார்த்து, "தமிழகத் தூதுவர் எங்கே?" என்று பரபரப்போடு கேட்டாள். "இந்தப் பக்கந்தான் போனார்" என்றான் அவன். "அவருக்குப் பலத்த காயமா?" 'இல்லை; முழங்கையில் மட்டும் சிறாய்ப்புக்கள் இருந்தன. தோள்பட் டையிலே சிறு கீறல் ஏற்பட்டு குருதி வழிந்திட்டது. மற்றபடி காயம் எதுவும் தெரிந்திடவில்லை' - அதனைக் கேட்டு நிம்மதியாய்ப் பெருமூச் செறிந்தாள் ஜூனோ. 'தூதுவர் அந்தக் காண்டாமிருகத்தினையே மண் கவ்வச் செய்திட்ட செய்தியினைக் கேட்டால், அகஸ்டஸ் பெருமகனாருக்கு அளவில்லாத பூரிப்பு உண்டாகுமே! மற்றவர்கள் போய்த் தெரிவிக்குமுன், நானே முந்திக்கொண்டு சென்று முதலில் சொன்னால் என்ன?' என்னும் விந்தையானதோர் ஆசையும் உண்டாயிற்று அவளுக்கு. தேரினை நிறுத்தி வைத்துவிட்டு வந்த இடத்தை நோக்கி விரைந் திட்டாள்.