ரோமாபுரிப் பாண்டியன்
573
ரோமாபுரிப் பாண்டியன் அங்கோ... அவளுடைய தேரினைக் காணோம்! 'அடிமை' யொருவன் அவளை நோக்கி ஓடோடி வந்தான். 573 "தேரைக் காணோமே என்று தேடுகிறீர்களா? தமிழகத் தூதுவரும் சிப்பியோவும் இப்போதுதான் அதில் ஏறிக் கொண்டு போனார்கள்" என்றான். 'அப்படியா? அவர்கள் எந்தப்பக்கம் போனார்கள் என்று தெரியுமா?" "பாலத்தின் குன்றுப் பக்கம்தான் தேர் பறந்து சென்றதைப் பார்த்தேன்" என்றான் அடிமை. ஆனால் அதே நேரத்தில் செழியனோ...? அவள் நினைத்திட்டது போல் அகஸ்டஸைச் சந்தித்து அளவளாவிக் கொண்டா இருந்திட்டான்? அல்லது, தனக்கு ஏற்பட்டு விட்ட சிறு காயங்களுக்குச் சிகிச்சைதான் பெற்றுக் கொண்டிருந்தானா? அல்ல. பிறகு...? அகஸ்டஸின் இல்லம் இருந்திடும் 'பாலத்தீன்' குன்றுக்கும் அருகே 'பரமபதம்' விளையாடும் படத்திலே காணப்படும் பாம்பினைப்போல் நெளிந்து வளைந்து செல்கிறதல்லவா ஒரு நெடுஞ்சாலை? அதிலே மேசனஸ் என்னும் வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளாகப் புரவிகள் மீதேறிப் பறந்து கொண்டிருந்த சில வீரர்களைப் பொருதிய வண்ணம் இருந்திட்டான் செழியன். சற்று முன்னர், காண்டாமிருகத்தோடு புரிந்திட்டானே அதனைவிடக் கடுமையான சண்டை; சாலை ஓரத்திலே தொடங்கிய அது, சற்றைக்கெல்லாம்.சாலையை ஒட்டிய இறக்கத்தில் உள்ள ஊசி இலைகளைக் கொண்ட 'பைன்' மரங்கள் அடர்ந்திட்ட பகுதிக்கும் நகர்ந்துவிட்டது. முதலில் வெறுங்கையனாகத்தான் அந்த வீரர்களிடையே புகுந்திட் டான் செழியன். ஆனால் கண்ணின் இமை திறந்திடும் அந்தக் கண நேரத்திற்குள் ஒரு வீரனுடைய வயிற்றினைத் தன் தலையினால் மோதித் தாக்கி அவனைத் தடுமாறி விழுந்திடச் செய்து, அவன் கரத்தில் இருந் திட்ட வாளினைப் பறித்துவிட்டான் அவன். அந்த வாளுக்குச் சிலர் வகையான உணவாகி வீழ்ந்தனர். பின்னர் நம் நாட்டுச் சூலாயுதம் போன்ற கருவியொன்றும் அதே வீர்களிடமிருந்து இவனுக்குக் கிட்டிவிட்டது.