பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

575


ரோமாபுரிப் பாண்டியன் 575 "இவர்களைத் தவிர இன்னும் வேறு யாராவது அகஸ்டஸ் அவர்களின் உயிருக்கு உலை வைக்கச் சென்றிருக்கலாம் அல்லவா?" "அப்படி யாராவது சென்றிருந்தால் அவர்களுடைய தலை இந்நேரம் துண்டாடப்பட்டிருக்கும்'. 86 $ 'அது எப்படி அவ்வளவு திட்டவட்டமாகச் சொல்கிறீர்கள்?” "சாலையைவிட்டுக் கீழே இறக்கத்தில் நீங்கள் சண்டைபோடும் பொழுதே அகஸ்டஸ் அவர்களுக்கு மருந்து வாங்கிக்கொண்டு வீரனொருவன் புரவிமீது வந்தான். தற்செயலாக அவனிடம் மேசனசின் சூழ்ச்சியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி, ஆட்சித் தலைவரின் பாதுகாப்புக்கு ஆவன செய்திடுமாறு கூறி அனுப்பிவிட்டேன். அது மட்டும் அல்ல; நமக்கு துணையாகவும் சில படைவீரர்களை அனுப்பிடச் சொல்லியிருக்கிறேன்." 1 "அப்படியா! மிக நல்ல நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் சிப்பியோ! ஆமாம், 'அரசியல், புலி' - என்று அழைக்கப்படும் மேசனஸ் இப்படி ஏன் தன் தரத்தினைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்! சிறிது நேரத்திற்கு முன்னர் வட்டக் கலையரங்கிலே, என்னோடு எவ்வளவு இனிமையாகச் சிரித்துப் பேசினார்? நான் யாரை அறவே வெறுக்கிறேன் தெரியுமா? என்னை நேருக்கு நேர் பொருத வந்திடும் எதிரிகளை அல்ல; கூட்டுறவு கொண்டு குழைந்திடும் பொழுதே குழியையும் பறித்திடும் துரோகிகளையே! அன்று ஜூலியஸ் சீசரை எப்படி புரூட்டஸ் - கேசியஸ் போன்றவர்கள் வஞ்சகமாகக் கொன்றார்களோ, அப்படித்தானே இன்று அகஸ்டசையும் தந்திரமாகக் கொல்ல முயன்றிருக்கிறார் மேசனஸ்! எல்லாரும் வேடிக்கைகளிலே ஈடுபட்டிருக்கும் வேளையாகப் பார்த்து, அகஸ்டசும் உடல் நலம் குன்றித் தனியாக இருந்திடும் சமயம் பார்த்துச் சூழ்ச்சியாக இப்படி ஆட்களை அனுப்பி இருக்கிறாரே! ஆனால் இனியும் இம்மாதிரியான நரிக்குணம் கொண்டோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அகஸ்டசிற்கு மட்டுமல்ல இந்த பரந்த ரோமாபுரிப் பேரரசுக்கே பெருங்கேடுதான் வந்திடும்!" "நீங்கள் என்னதான் சொல்லுங்கள்! மேசனசைப் பழிக்குப் பழி வாங்கிடவே மாட்டார் நம்முடைய ஆட்சித் தலைவர். அவர், இப்படி விட்டுக் கொடுத்துக் கொண்டே போவதுதான் எதிரிகளுக்கு இடங்கொடுத்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீராவேசம் மிக்க வேங்கையாகப் பாய்ந்திட்ட அவர் இப்போது அமைதியை நாடிடும் வெண்புறாவாக மாறிவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள் அவர்கள். அதனால் எதையும் செய்திடலாம். எப்படியும் ஏசிடலாம் என்று எண்ணுகிறார்கள்; என்னைப் பொறுத்த வரையில் நம் ஆட்சித்