பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

577


ரோமாபுரிப் பாண்டியன் 577 ரோமாபுரிச் செல்வச் சீமான்கள் பொதுவாக மேலே ஓரடுக்கோ ஈரடுக்கோ கொண்ட மாளிகைகளிலே அந்தநாளில் வாழ்ந்து வந்தனர். நடுவே சிறு உள் முற்றம் அதனைச் சுற்றிலும் நெடிய தூண்கள் எழுப்பப்பட்ட நீண்ட சதுரமான ‘ஆப்ரியம்' என்று அழைக்கப்படும் கூடம் போன்ற பிரகாரத்தளம். அதனை ஒட்டிச் சிறுசிறு அறைகள், சலவைக்கற்கள் பளபளக்கும் தரைகள், சுவர்கள், உப்பரிகையின் மேலே தனிப் பொலிவோடு கண்களைக் கவரும் பசுமையான 'கூரைப்பூங்கா.' செழியன் சென்றடைந்திட்ட மருத்துவருடைய இல்லமோ அவன் கற்பனை செய்திருந்தவாறு, பெரிய மாளிகையாக இல்லை; சாதாரண எளிய வீடாக இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய 'ஆலிவ்' எண்ணெய் விளக்குகளும் அங்கே எரிந்திடவில்லை; மிருகங்களின் கொழுப்பினாலான மெழுகுவர்த்திகளே அடக்கமான முறையில் ஒளியினைச் சிந்தின. குளிரை விரட்டுவதற்கான கணப்பு இல்லாத வீட்டினையே ரோமாபுரியிலே கண்டிட முடியாது. ஆனால் செல்வர்கள் தங்கள் மாளிகையின் பிராசியர்ஸ் எனப்படும் கலை வேலைப்பாடுகள் கொண்ட பித்தளைத் தட்டிலேதான் மரக்கரித் துண்டு களால் கணப்புப் போட்டு எரியவிட்டிருப்பார்கள். இந்த மருத்துவரின் இல்லத்திலே கொள்ளிக் கட்டைகளே தகதகவென்று கணப்பாக அனலை வீசிக் கொண்டிருந்தன. கட்டில், பீரோ போன்ற மரச்சாமான்களும் நிறைய இல்லை; இரண்டு மூன்று முக்காலிகளும், ஒரேயொரு நாற்காலியுமே கிடந்தன. செழியனும் சிப்பியோவும் உள்ளே நுழைந்த பொழுது அந்த வயது முதிர்ந்த மருத்துவர், ஏதோ மூலிகையை ஆய்ந்த வண்ணம் இருந் திட்டார். சிப்பியோவைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் வரவேற்ற அவர், "இவர், தமிழகத் தூதுவர்தானே?" என்று கேட்டார். "ஆம் அவரேதான்," என்றான் சிப்பியோ. "இது என்ன கையிலே குருதி வழிந்து உறைந்திருக்கிறது?" "இன்று ஆம்பி தியேட்டரில், காண்டாமிருகத்தோடு ஒரு வேடிக்கைக் காகச் சண்டைபோட நேர்ந்துவிட்டது. அதனால் சிறிது காயங்கள் ஏற்பட்டுவிட்டன' $1 பாதிப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைத்திட்டான் சிப்பியோ! t "இது என்ன கொடுமை! காண்டாமிருகத்தோடெல்லாம் இவரைப் போய் சண்டையிடச் சொல்வதாவது? அதனிடமிருந்து உயிரோடு தப்புவதே கடினமாயிற்றே! சரி. இப்படி முக்காலியில் அமருங்கள்! நான்