584
கலைஞர் மு. கருணாநிதி
584 கலைஞர் மு.கருணாநிதி படுக்கை மெத்தையில் அவனது தலைமாட்டில் அமர்ந்திருந்த ஜூனோ தன் தலையினை அவனுக்கு மிகநெருக்கமாகக் கவிழ்த்திட்ட வண்ணம் அவனது முடியினைக் கோதுவதும் நெற்றியைப் பிடித்து விடுவதுமாக இருந்திட்டாள். முந்தினநாள் கடுஞ்சண்டைகளினால் ஏற்பட்ட உடம்பு அலுக்கையினை மறக்க அடித்திடும் வகையில் அவளது மலர்க்கரம் தன் மேனியிலே தவழ்ந்திடுவது இதமாக - இன்பமாகவே இருந்திட்டது செழியனுக்கு - என்றாலும் மற்றவர்கள் பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்னும் எண்ணம் எழுந்திட்டதுமே அவளு டைய கையினை மெல்ல அப்புறப்படுத்திவிட்டுப் படுக்கையினின்று கீழே இறங்கி நின்று கொண்டான் அவன். போலித்தனமான ஒரு புன்முறுவலைச் சிந்தியவாறே, "நீ எப்போது வந்தாய்?" என்று கேட்டான் ஜூனோவை நோக்கி. "சிறிது நேரத்திற்கு முன்னர்தான் வந்தேன். அகஸ்டஸ் அவர்கள் உடனே உங்களை அழைத்து வரச் சொன்னார்கள்." "எதற்கு?" 'உங்களுடைய உடல் நலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆலயங்களுக்கெல்லாம் சென்று வழிபாடுகள் நடத்திட வேண்டுமாம். முக்கியமாக பாலத்தீன் குன்றில் அவர் புதிதாக எழுப்பியுள்ள 'அப்பல்லோ' தெய்வத்தின் ஆலயத்திற்கும், 'கேபிடால்' குன்றிலுள்ள ஜூபிடர் ஆலயத்திற்கும், ரோமாபுரிப் பேரரசின் வெற்றிக்கே காரணமான தெய்வமாகக் கருதப்படும் 'மார்ஸ்' ஆலயத்திற்கும் போக வேண்டுமாம்." 84 எனக்கென்னவோ என் உடல் நலம் தேறுவதற்கு இப்போது தேவையானது தேர்ச்சி பெற்ற மருத்துவர்களின் சிகிச்சைதானே அன்றித் தெய்வ வழிபாடு அல்ல என்றே தோன்றுகிறது!" என்று சிரித்திட்டான் செழியன். "நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்குக் கடவுள் நம்பிக் கையே இல்லை என்று தெரிகிறதே! "கடவுளை நாம் நம்புகிறோமா என்பதைவிடக் கடவுள் நம்மை நம்பிடும் அளவுக்கும் நாம் நாணயமானவர்களாக, நச்செண்ணங்கள் இல்லாதவர்களாக. கருணை மிகுந்தவர்களாக, கடமையிலிருந்து வழு வாதவர்களாக - நடந்து கொள்கிறோமா என்று சிந்தித்திட வேண்டும்; செயலாற்றிடவும் வேண்டும்." "நீங்கள் பொல்லாத ஆள்தான்! எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக் கிறீர்களே! சரி நேரமாகிறது, புறப்படுங்கள். இந்நேரம் உங்கள் வருகை