பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588

கலைஞர் மு. கருணாநிதி


மதுரை மாநகர் மட்டுமல்ல பாண்டி மண்டலமே துயரப் பெருமூச்சினைவிட்டுக் கொண்டிருந்தது; அந்தப் பெருமூச்சு எந்த நேரத்திலும் கதறலாக - கண்ணீர் வெள்ளமாக - வெடித்திடலாம் என்னும் நிலையும் அப்போது நிலவிற்று. - அதற்குக் காரணம் என்ன? அணைந்திடப்போகும் விளக்காக உதிர்ந்திடப் போகும் பழுத்த மட்டையாக - பெருவழுதிப் பாண்டியன் மறுபடியும் படுக்கையிலேயே விழுந்திட்டதுதான் ! சில திங்களுக்கு முன்னர் உடல் தேறி நடமாடியவன் ரோமாபுரிக்குத் தூதுவனாகப் புறப்பட்ட செழியனை வழியனுப்பி வைத்திடக் கொற்கைப் பட்டினத்துக் கடற்கரைக்கே சென்றிட்டவன். -இப்போது கால்களை அசைத்திடாமல், கரங்களை இயக்கிடாமல் கட்டிலோடு கட்டிலாக ஒட்டிக் கிடந்திட்டான். எனினும், ஒளி குன்றிடாத விழிகளும், மிக மெல்லிய குரலில் என்றாலும் பேச்சினை இழந்திடாத வாயுமே இன்னும் அரசன் கவலைக்கிடமான நிலையினை எய்திடவில்லையெனப் பகராமல் பகர்ந்தன. தங்களுடைய மாமன்னர் இங்ஙனம் மரணத்தின் வாயிலை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டாரே என்று மக்கள் எல்லோரும் மனம் நொந்து வேதனை நெருப்பினில் வெந்திடும் வேளையில்- அரசனின் அருமை மகனான இளம்பெருவழுதியோ எழிலரசி தாமரையை இன்னும் கண்டுபிடித்திட முடியவில்லையே என்னும் ஏக்கச் சேற்றிலேயே புழுவாய் நெளிந்திட்டான். இரவோடு இரவாக ஊருக்கு ஊர் அவளைத் தேடித் தேடி அலைந்திட்டான். தளபதி நெடுமாறனுக்கோ அரியணையை எவ்வாறு கைப்பற்றுவது என்பது பற்றியே ஓய்ந்திடாத சிந்தனை, அடங்காத ஆசைப் பசி! இந்நிலையில், புலவர் காரிக்கண்ணனாரும் அவருடைய செல்ல மகள் முத்துநகையுமே, ஊண், உறக்கம் பாராது ஓய்வுதனை நாடாது