பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

591


ரோமாபுரிப் பாண்டியன் 591 முத்துநகை இவ்வாறு மொழிந்திடக் கேட்டதும் பெருவழுதிப் பாண்டியனின், துயர நிழல்படர்ந்து கூம்பிக் கிடந்திட்ட முகம் கூடச் சற்றே விரிந்து மலர்ந்திட்டது. பூரிப்பினால்! உன்னைப் பற்றி - உன் ஆற்றலைப் பற்றி - உன் அஞ்சாமையைப் பற்றி நான் அறிந்திட மாட்டேனா, முத்துநகை? செழியனின் உயிரினைக் காப்பாற்றிடத்தானே கரிகாலனின் இசைவோடு நீ ஆணுடை அணிந்து காடுமேடெல்லாம் சுற்றிப் படாதபாடுகளையெல்லாம் பட்டுத் தவித்திட் டாய்! உன்னுடைய நாணயத்திற்கும் நேரிய நெஞ்சினுக்கும் இந்த நானிலமேதான் ஈடாகுமா? தந்தை என்கிற சொந்த உறவு முறைகளைக் கூடத் தூரத்தள்ளி வைத்துவிட்டு, ஆட்சிக்கு அணுவளவும் ஊறு வந்திடக் கூடாது என்று அரும்பணியாற்றிய உன் ஆர்வத்திற்கு எதனைத்தான் இணையாக இயம்பிட முடியும்? எனவே நீ என் பொருட்டு ரோமாபுரிக் குச் சென்றிட முன் வந்தது குறித்து எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி! என்னை மடக்கிப் போட்டு விட்ட முடக்குவாத நோயே பாதி தீர்ந்து விட்டது போல் நான் இப்போது எத்துணைக் களிப்பினைத் துய்த்திடு கிறேன் தெரியுமா?" பல நாட்களாக நான்கு வார்த்தைகளைச் சேர்ந்தாற் போல் உதிர்த் திடவே திணறலைக் காட்டிய பாண்டிய வேந்தர், இன்று நெடுநேரம் தெளிவாக உணர்ச்சிப் பெருக்கோடு பேசியது. புலவருக்கும் முத்துநகைக்கும் உவப்பினை மட்டுமின்றி வியப்பினையும் அளித்திட் டது. மறுநாளே முத்துநகை யவனக் கிழவர் ஒருவர் துணையோடு ரோமாபுரி நோக்கி மரக்கலத்தில் கிளம்பிவிட்டாள்.

=

ட இருங்கோவேளினால் கொப்பளித்துக் கொண்டிருந்த உள்நாட்டுப் பூசல்கள் - உட்பகைகள் அவனுடைய மறைவோடு மறைந்துவிட்ட போதிலும், பூம்புகாரில் மட்டுமின்றிச் சோழ மண்டலத்தின் பிற பகுதிகளிலும், பல முன்னேற்றத் திட்டங்களை செயற்படுத்திட முனைந்து ஈடுபட்டு இருந்தமையால் கரிகாற்சோழனுக்கு ஓய்வு என்பதே எள்ளளவு கூட இல்லாமல் அருகிப்போய்விட்டது. என்றாலும் கூடப் பாண்டிய வேந்தன் மீண்டும் படுக்கையோடு படுக்கையாக விழுந்திட்டான் என்றும், தன்னுடைய இறுதிக்கால ஆசைகளை ஏற்பாடுகளைத் தெரி வித்திடக் கரிகாலனைக் காண விழைகின்றான் என்றும் புலவர் காரிக் கண்ணனாரிடமிருந்து மறவன் ஒருவன் மூலம் மடல் வந்திடவும், தன்னு டைய அலுவல்கள் அத்தனையையும் ஒத்திவைத்துவிட்டான் சோழப் பேரரசன்; மதுரை மாநகரினை நோக்கி உடனே புறப்பட்டும் விட்டான். - முத்தமிழ் வளர்த்திடும் வித்தாரத் தொட்டிலாம் பாண்டிய நாட்டுத் தலைநகரமே அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது.