பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

593


ரோமாபுரிப் பாண்டியன் 593 என்றெல்லாம் கற்பனைக் கடலிலே மிதந்து கொண்டிருந்தான் நெடுமாறன். ஆனால் கரிகாலனோ...? உங்கள் மன்னன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும்போது எனக்கு மட்டும் யானைமீது ஊர்வலமா? நன்றாக இருக்கிறது, தளபதி யாரே! நன்றாக இருக்கிறது உங்கள் ஏற்பாடு! முதலில் இந்த முரசங்கள் முழங்குவதையெல்லாம் நிறுத்தச் சொல்லுங்கள். இத்தகைய போலித் தனமான வரவேற்புகள் எல்லாம் எனக்கு அறவே பிடிக்கமாட்டா” என்று கூறிய அவன், தொடர்ந்து நடந்தே சென்றிட்டான். சற்றைக்கெல்லாம் புலவர் காரிக்கண்ணனார் எதிர்கொண்டழைக்க வந்து சேர்ந்தார். கரிகாலனை காவலரும் பாவலரும் உரையாடியவாறே மதுரை வீதியூடே நடந்து சென்றனர். அரண்மனைக்குள் வந்து, படுக்கையில் கிடந்திடும் பெருவழுதிப் பாண்டியனைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுப் போனான் கரிகாலன். வற்றிய பீர்க்கங்காய் போலப் பாண்டிய வேந்தனின் உடல், ஒட்டிச் சுருங்கி உலர்ந்திருக்கக் கூடுமென்று அவன் நினைத்திடவே இல்லை; அவனுடைய விழிகள் நீரிலே மிதந்தன. சிறிது நேரம் சென்றது. அந்தத் தனியறையில் கரிகாலனையும், காரிக்கண்ணனாரையும் தவிரத் தனக்குச் சிகிச்சை அளித்திட்ட அரண்மனை மருத்துவர் உட்படத் தன்னைக்காண வந்திருந்த அத்தனை பேரையும் ஏன், தளபதி நெடுமாற னையே கூட - வெளியேறி விடுமாறு தன் கையினாலேயே சைகை செய்திட்டான் பெருவழுதிப் பாண்டியன். அவர்கள் யாவரும் அகன்றிட்ட பின்னர், தன் தலைப்புறத்தே சுவர் ஓரமாகக் கிடந்திட்ட ஒரு சிறிய பேழையினை எடுத்து வருமாறு கூறினார். காரிக்கண்ணனாரிடம். புலவர் அதனைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தார். பெருவழுதி தந்த திறவுகோலினால் அதனைத் திறந்தார். உள்ளே, ஒரு பகுதியில் பல்வேறு வயிரக் கற்கள், அணிமணிகள், பதக்கங்கள் மின்னின; மறு பகுதியில் ஓலை நறுக்குகள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பாண்டிய வேந்தனின் வேண்டுகோளின்படி அந்தச் சுவடிகளைப் படிக்கத் தொடங்கினான் கரிகாலன்.