பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

597


ரோமாபுரிப் பாண்டியன் 597 அவர்களுடைய பேச்சினூடே இரண்டு சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப் பட்டன; ஒன்று அகஸ்டஸ், மற்றது செழியன். முத்துநகை ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாகப் பெருமூச்செறிந் திட்டாள். உரையாடிக் கொண்டு வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை; தூரம் போனதும் தெரியவில்லை. அவர்களைச் சுமந்து வந்திட்ட சிறு தேர் விரைவிலேயே செழியன் இல்லத்தினை நெருங்கிவிட்டாற்போன்ற உணர்வே இருவருக்கும் உண்டாயிற்று. தேரினைவிட்டுக் கீழே இறங்கிய முத்துநகை, தமிழகத் தூதுவன் தங்கியுள்ள மாபெரும் மாளிகையினைக் கண்டதும் மலைத்தே போய்விட்டாள். செழியன் அண்ணாவை ஓர் இளவரசரை போலத்தான் அகஸ்டஸ் நடத்தி வருகிறார் என்று தெரிகிறது; இல்லையென்றால் இவ்வளவு அழகிய பெரிய மாளிகையை அளித்திருப்பாரா?' என்று எண்ணிக் கொண்டு அவள், யவனக்கிழவர் பின்தொடர, மேல் உப்பரிகைக்கு விரைந்திட்டாள். அங்கே, மிகப் பரந்தவெளிக்கூடத்தில் அவள் நுழைந்திட்டபொழுது படுக்கையறைப் பக்கமிருந்து வந்த குரலொலிகள் அவளைத் திகைக்க வைத்திட்டன. 'தாமரையைத்தான் இளம்பெருவழுதி என்கின்ற இளவரசரும் காதலிப்பதாகக் கூறுகிறீர்களே! அப்படியிருக்க அவளையே இன்னும் ஏன் நீங்கள் நினைத்துக் கொண்டு அழவேண்டும்? உங்களை நீங்கள் ஏன் பாழடித்துக் கொள்ள வேண்டும்? 'அதுதான் எனக்கும் புரிந்திடவில்லை. ஓலைச்சுவடியில் வரையப் பட்ட எழுத்தினைப்போல அவள் என் இதயமடலிலே ஆழமாக, அழுத்தமாகப் பதிந்துவிட்டாள். அவளை எப்படி அவ்வளவு எளிதாக என் நெஞ்சினைவிட்டுப் பிய்த்து எறிந்திட முடியும்? தாமரையையாவது நான் மறப்பதாவது?" "உங்களை வஞ்சித்துவிட்டு இன்னொருவனுக்குத் தன் கழுத்தை நீட்டத் துணிந்துவிட்ட அந்தக் கேடு கெட்டவளை நீங்கள் நினைத்துக் கொண்டே இருப்பதில் என்ன பொருள் இருக்கிறது? என்ன பயன் இருக்கிறது?" 14 "ஆனால் தாமரை என்னை வஞ்சித்தாள் என்று சொல்ல முடியாதே! அவளிடந்தான் நான் என் காதலைப் பற்றி மனத்திறந்து பேசிட வில்லையே!"