ரோமாபுரிப் பாண்டியன்
599
ரோமாபுரிப் பாண்டியன் 599 ஊம்... என்று செழியன் சட்டென்று ஏதோ நினைவு வந்து விட்ட வனைப்போல், '“ஆமாம்; முத்துநகையும் உன்னோடு வந்து தங்கட்டுமே! உங்கள் ஆட்சித் தலைவரின் இல்லத்தையும் அவள் பார்த்த மாதிரி இருக்கும்" என்றான். "அதுவும் நல்ல யோசனைதான்; நாளைக்கே நானும் உங்களுடன் தபழகத்திற்குத் திரும்பிட வேண்டுமே? அதற்குள் இந்த அழகான ரோமாபுரியை நான் எங்கே சுற்றிப் பார்த்திட முடியும்? ஆகவே, அந்த ஆட்சித் தலைவரின் இல்லம் ஒன்றையாவது பார்க்க முடிந்ததே என்கிற நிறையாவது எனக்கு கிடைத்திடட்டும்" என்றாள் முத்துநகை. "நீங்கள் நாளைக்கே கிளம்பிடத்தான் வேண்டுமா?" கேட்கும் பொழுதே ஜூனோவின் குரல் தழுதழுத்து விட்டது! 'வேறு வழி...?' என்பதைத் தவிர வேறு என்ன விடையைத்தான் அளித்திட முடியும் செழியனால்? இரவு முழுவதும் உறக்கமே வந்திடவில்லை செழியனுக்கு; மண் ணிலே புரட்டி எடுக்கப்படும் மட்டக்குதிரையினைப் போலப் பற்பல வகையான நினைவுக் கயிறுகளின் இழுப்புக்கு ஏற்ப அவன் படுக்கை யிலேயே புரண்டு புரண்டு நெளிந்திட்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட பெருவழுதிப் பாண்டியனின் பெருந்தன்மை - பாசமழை - தான் ரோமாபுரிக்குத் தூதுவனைத் தேர்ந்தெடுக்கப்பட்டதைச் செரித்துக் கொள்ள முடிந்திடாமல் தளபதி நெடுமாறன் கக்கிய புகைச்சல்கள் - பொறாமைக் கொழுந்துகள் சுழலும் விழியாலும் சுவை கொட்டும் மொழியாலும் தன்னைச் சொக்க வைத்திட்ட தாமரையை, இளம்பெருவழுதியும் காதலிக்கிறான் என்பது தெரிந்தும்கூட அவளைத் தன் மனத்திரையினின்றும் பிய்த் தெறிய இயலாமல் அவளிடம் தான் கொண்டிருக்கும் ஈடுபாடு இதயத்தாகம் - அதே தமிழகத் தளிர்க்கொடியின் முகவெட்டும் உடற்கட்டும் பூண்டு, இந்த ரோமாபுரி மண்ணிலே தன்னையே வளைய வளையச் சுற்றி வந்து, தனக்காக உயிரினை விடவும் தயங்கிடாத கட்டழகி ஜூனோவின் விழிவீச்சு -மதுப்பேச்சு. 'ஜூலியஸ் சீசருக்கு பின்னால் ரோமானியப் பேரரசு என்ன ஆகுமோ?' என்று - வேண்டியவர்களின் அச்சமும், வேண்டாதவர்களின் ஆசையும் நிறைவேறிடா வண்ணம், அவரைப் போலவே தன்னாலும் எ