பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

603


ரோமாபுரிப் பாண்டியன் 603 'அவளுடைய நெஞ்சில் நிறைந்தவர்கள் யாரும் அண்மையில் இறந்து போனதாக எனக்குத் தெரியவில்லை!" "ஏன் இப்படியெல்லாம் அமங்கலமாகப் பேசுகிறீர்கள்? ஓர் அப்பாவிப் பெண்ணின் மனத்தைக் கெடுத்துவிட்டு இப்படிப பாரா முகமாய் நடிப்பது உங்களுக்கே அழகாக இருக்கிறதா?" ப "நீ என்ன சொல்கிறாய் முத்துநகை?" 'உண்மையைத்தான் உடைத்துச் சொல்கிறேன். அண்ணா! அவள் உங்கள் மீது பைத்தியமாகவே இருக்கிறாள். என்னைப் பொறுத்தவரை யில் வெளித்தோற்றத்திலேதான் அவள் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு வீராங்கனையாக விளங்குகிறாளே யன்றி உள்ளூர அவள் ஓர் உணர்ச்சிப் பிழம்பே. நீங்கள் மட்டும் அவளுக்கு ஏதாவது ஒரு வழி செய்யாமல் தமிழகத்திற்குப் புறப்பட்டீர்களோ, அவள் இந்த டைபர் நதியிலேயே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாலும் நான் வியப்படைந்திட மாட்டேன். அந்தப் பழி உங்களைப் பிறகு வாளா விடாது. நீங்கள்தான் அவளை மணம்புரிந்து கொண்டு நம் தமிழகத் திற்கே கூட்டி வந்துவிட்டால் என்ன?" அது எப்படி அவளை நான் மணந்திட முடியும்? காதலிப்பது ஒருத்தியை, மணம் முடிப்பதோ வேறொருத்தியை என்றால், அது காதலையே சூதாட்டக் காயாக்கிடும் வஞ்சகச் செயல் இல்லையா?" "நீங்கள் என்ன புதிர் போடுகிறீர்கள்? உண்மையிலேயே நீங்கள் ஜூனோவைக் காதலித்திடவில்லையா?" "இல்லை. அறவே இல்லை; அவள் வேண்டுமானால் என்னைக் காதலித்திருக்கலாம்; அதற்கு நானா பொறுப்பாளி? நான் காதலித்த தெல்லாம் ஒரே ஒருத்தியைத்தான் - தாமரையைத்தான்!' "நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது! தாமரையை நம் இளவரசர் இளம்பெருவழுதி அல்லவா காதலிக்கிறார்? அவர்தானே இன்றைக்கும் அவளைத்தேடி அல்லும் பகலும் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்?" "ஏன், இன்னும் அவளைக் கண்டுபிடித்திட முடியவில்லையா? "அது அவ்வளவு கிள்ளுக்கீரையா என்ன? அந்த இருங்கோவேளின் ஆட்கள் அவளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்களோ! இல்லை. கொன்றுவிட்டார்களோ - கொளுத்தி விட்டார்களோ? யார் கண்டது? அது சரி. நீங்கள் தாமரையைக் காதலிக்கின்ற அழகு இவ்வளவு தானா?'" ஏளனமாக வினவினாள் முத்துநகை. “என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்? என் காதல் உண்மையானதுதான் என்று உன்னால் நம்ப முடியவில்லையா?