பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

கலைஞர் மு. கருணாநிதி


604 கலைஞர் மு. கருணாநிதி 'நம்பும்படியாக நீங்கள் நடந்துகொள்ளவில்லையே! காணாமற் போன தாமரையைக் கண்டுபிடித்திட நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டீர்கள்? தூதுவர் பதவி கிட்டியது!. ரோமாபுரிக்கு ஓடிவந்து உட்கார்ந்து கொண்டு விட்டீர்கள்..." “நான் ஒன்றும் இந்தப் பதவிக்காக ஏங்கிப் போய்ப் பேராசை பிடித்து இங்கே ஓடிவந்து விடவில்லை. மக்களில் பெரும்பாலோர் இந்தப் பொறுப்பிற்கு நான் பொருத்தமானவன் என்று நம்பினார்கள்; விரும் பினார்கள்; மன்னரும் கட்டளையிட்டார்; அவருடைய கட்டளையை நான் எப்படி மீறிட முடியும்? காதல் பெரிதா, கடமை பெரிதா என்று சிந்திக்கும்பொழுது கடமையே பெரிதென்று எனக்குப் பட்டது. உன் தந்தையாகிய புலவர் அவர்களும் அவ்வாறே வற்புறுத்தினார்கள். அதனால்தான், இந்தப் பதவியினை ஏற்றுக் கொண்டேனே தவிர வேறில்லை!" "நான் சொல்ல முற்பட்டதும் அதனைத்தான். உங்களை பொறுத்த வரை காதலைவிடக் கடமைதான் பெரிது; அந்த உங்கள் கண்ணோட்டத் தினை நான் குறைத்து மதிப்பிடவே இல்லை. அதேசமயம் நம் இளவரசரைப் பார்த்தீர்களா? கொற்கைப்பட்டினத்தின் நிர்வாகத்தைப் பற்றிய கவலையைவிடத் தாமரையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள கவலையே அவருக்கு மிகுதியாகி விட்டது. அவரைப் போலக் காதலுக்காகக் கடமையை மறக்கவோ - துறக்கவோ - முடியாத நீங்கள், பிறகு அந்தக் காதலியை மட்டும் மறக்காமல் மனம் புழுங்குவானேன்? மகிழ்ச்சியினைத் துறப்பானேன்? இன்னோர் உண்மையையும் உரைத் திட்டால் உங்களுக்குச் சினம் வந்திடாதே?" “என்ன உண்மை அது?" "உங்களை ரோமாபுரியில் கொண்டு வந்து நிறுத்தியதில் உங்களு டைய கடமையுணர்வுக்கு முக்கால் பங்கு பெருமை உண்டென்றால், இளவரசரே காதலிக்கிறார் என்கிறபோது இனிமேல் தாமரை எங்கே நமக்குக் கிட்டிடப்போகிறாள்?' என்கிற உங்கள் 'விரக்தி'க்கு வெறுப்புணர்வுக்கு - கால் பங்கேனும் இடம் உண்டல்லவா?" "நீ சொல்கிறபடியே தான் வைத்துக் கொள்ளேன்!” "அப்படி நீங்களே அடைய முடியாது என்று ஒதுக்கி விட்டு விட்டவளை இன்னும் ஏன் நினைத்து நினைத்து உருகிட வேண்டும்.?" 8% "நீ கூறுவதைப் பார்த்தால் ஜூனோவையே மணந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவாய் போல் தெரிகிறதே!'