பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

605


ரோமாபுரிப் பாண்டியன் 605 'கண்டிப்பாக! எனக்கென்னவோ ஜூனோ உங்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவள் என்றே தோன்றுகிறது. அத்தோடு, நாம் தேடிச் செல்கின்ற பொருளைவிட நம்மைத் தேடி வருகின்ற பொருளே நமக்கு ஏற்றது - இனிப்பானது அப்புறம் இன்னொன்றை உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேனே!' 74 'என்ன அது? 'இன்று நாம் தமிழகத்திற்குப் புறப்பட முடியாது! நாளை மறுநாள் தான் கிளம்பலாம்.' "ஏன் அப்படி? இந்த ஒத்திவைப்பும் ஜூனோவின் தந்திரம்தானா?" "இல்லை, இல்லை; அகஸ்டஸ் பெருமகனாரே என்னிடம் நேரில் சொன்னார். நாளைக்கு உங்களுக்கு ஒரு பெரிய பிரிவு விழா விருந்தினை நடத்தியே தீரவேண்டுமாம்!" ஆமாம்; நீ எப்போது அகஸ்டஸ் அவர்களைச் சந்தித்தாய்?" "சற்று முன்னர்தான் அவரைச் சந்தித்தேன்; ஜூனோதான் என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள்; நான் எதிர்பாராத அளவுக்கு என்னைப் பற்றி வானளாவப் புகழ்ந்திட்டாள்" ஓகோ! அந்தப் புகழ்ச்சியில் மயங்கித்தான் அவளுக்காகப் பரிந்து பேசிடவும் முனைந்தாயாக்கும்!” - கேலியாக நகைத்திட்டான் செழியன். "நான் ஒன்றும் புகழ்ச்சிக்கு மயங்கிவிடுபவள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா அண்ணா?... அப்புறம் இன்னொன்றையும் அகஸ்டஸ் வற்புறுத்தினார் !" "எதைப் பற்றி?" "நாளை நடக்கப்பேகும் விருந்தைப் பற்றித்தான். சில தலையாய விருதுகளையும் பரிசுப் பொருள்களையும் அவர் அளித்திட திட்டமிட்டுள்ளாராம்; அவற்றுள் எதையுமே மறுத்திடாமல் நீங்கள் எல்லாவற்றையுமே ஏற்றுக் கொண்டிட வேண்டுமாம்!' "அப்படியா?... ஆனால் அவற்றை நான் தமிழகத்திற்குக் கொண்டு சென்றால். அங்கேயுள்ள தளபதி நெடுமாறன் போன்றவர்கள் வயிற் றெரிச்சல் கொண்டிட மாட்டார்களோ?" "இப்படியெல்லாம் பொறாமைப் புழுக்களுக்கு அஞ்சி அஞ்சி நம்மை நாமே எத்தனை காலத்திற்குத்தான் ஒடுக்கி ஒடுக்கி உடைந்து சிதைவது? நாமாக, ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாக, அவருக்கு உரிமையுள்ள பொருளைப் பறித்திடவில்லையே!"