608
கலைஞர் மு. கருணாநிதி
608 கலைஞர் மு. கருணாநிதி அகஸ்டஸ் இவ்வாறு தன்னைப் பல்லாயிரக்கணக்கானோர் முன் னிலையில் மடக்கிவிடுவார் என்று அவன் எதிர்பார்த்திடவே இல்லை. அவருடைய பரிசினை மறுத்திடவும் துணிவின்றி - மகிழ்ச்சியோடு ஏற்றிடவும் மனம் இன்றி - அவன் தவியாய்த் தவித்தான்; தத்தளித்துத் திணறினான். அவனுக்கு அருகினில் அமர்ந்திருந்த முத்துநகைக்கோ, எங்கே அவன் ஜூனோவை ஏற்றிட மறுத்து, முரண்பாடான கருத்துக்களை மொழிந்திடுவானோ என்னும் அச்சம். எனவே இவ்வாறு எச்சரித்திட முனைந்து விட்டாள்: செழியன் அண்ணா! அருள் கூர்ந்து உங்கள் நன்றியுரையிலே ஏறுமாறாக ஏதும் இயம்பிவிடாதீர்கள். அகஸ்டஸ் அவர்களின் பரிசளிப்பிலே ஜூனோவைப் பற்றி - ஏன் இந்த ரோமாபுரி நாட்டைப் பற்றி - எத்தனையோ இரகசியங்கள் எல்லாம் ஒளிந்திருக்கின்றன இலை மறை காய்களாக! அவை என்ன என்பதனைப் பின்னர் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன். இப்போது என் பேச்சினைத் தட்டிடாமல் ஜூனோவை ஏற்றுக் கொண்டு விடுங்கள்." டு முத்துநகையின் இந்த வேண்டுகோளில் பொதிந்திருந்த அழுத்தம் ஜூனோவைப் பற்றி மாறுபாடாக மறுத்துரைக்கவோ -வெறுத்துப் பேசவோ இடங்கொடாமல் செழியனின் நாவினை முடக்கிப் போட்டு விட்டது. எனவே தன்னுடைய நன்றியுரையின்போது ஜூனோவைப் பற்றி என்ன நவின்றிட்டான் செழியன்? எதுவுமே இல்லை. பிரியாவிடை பெற்றிட்ட அந்த வேளையில் தன் உள்ளத்தில் பொங்கிடும் உணர்ச்சி களுக்கெல்லாம் உருவம் தீட்டி, அகஸ்டஸ் அவர்களின் ஆற்றலை வியந்து போற்றி, ரோமானிய மக்களின் நெஞ்சமெல்லாம் உருகிட - உவந்திட அவன் சொற்பொழிவாற்றிய பகுதியின் சாரம் இது தான்: 'நம்மிரு நாடுகளுக்கும் இடையே புதியதொரு கடல் வழியினைக் காண் பதற்கு உங்கள் ஆட்சித் தலைவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு." - இவ்வாறு செழியன் ஆற்றிய சொற்பொழிவினை உடனுக்குடன் சிப்பியோ மொழி பெயர்த்திடும் பொழுதே செனேட்டர் ஒருவர் குறுக்கிட்டார்.“ஏன் இப்போதுள்ள கடல் வழியால் நன்மை இல்லையா? அதனால் உங்கள் தமிழகத்திற்கு எந்த வகையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை விளக்குவீர்களா?" "இப்போதுள்ள வழியினால் எத்தனையோ இடையூறுகள் எங்கள் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ளன. அதனால் மரக்கலங்கள் செல்லவேண்டிய