பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

609


ரோமாபுரிப் பாண்டியன் 609 தொலைவும் மிகுதி. காலமும் மிகுதி. தற்போது கலங்கள் யாவும். ரோமாபுரியிலிருந்து தென்கிழக்கேயுள்ள செங்கடல், ஏடன் நகர் மற்றும் அரேபியா நாடுகளின் தென் கடற்கரை ஓரத்தினையெல்லாம் தொட்டுக்கொண்டு, சிந்துநதியின் முகத்துவாரத்தை அடைகின்றன; பிறகுதான் அங்கிருந்து நாவலந்தீவின் மேற்குக் கரையோரமாகவே வந்து எங்கள் தமிழகத் துறைமுகங்களைச் சேர்கின்றன. இடையிலே 'ஷீபா' நாட்டினைச் சார்ந்திட்ட 'சபீனியர்கள்' தரகர்களாக இருந்து கொண்டு தந்திடும் தொல்லைகளுக்கோ அளவே இல்லை. இரண்டு நாட்டுப் பொருள்களின் விலைமதிப்பையும் தங்கள் இச்சைப்படி யெல்லாம் அவர்கள் ஏற்றி விட்டு விடுகிறார்கள். இத்தகைய இடைத் தரகர்கள் கொழுப்பதற்கு இடம் அளிப்பது நம்முடைய வணிக வளர்ச்சிக்கு நல்லதே அல்ல." செழியன் இவ்வாறு ஆணித்தரமாகச் சாற்றிடவும், அகஸ்டஸ் பெருமகனாரும் தக்கவாறு நிலைமையைத் தெளிவுபடுத்தினார். "தமிழகத் தூதுவர் புகல்வது முற்றிலும் உண்மையே! அதனால்தான் புதிய கடல் வழியை - வணிக வழியை - எப்படியாவது கண்டுபிடித்து விடுவதற்கான வழி துறைகளை ஆராய்ந்திடுமாறு கப்பல் மாலுமியான 'ஹிப்பில்ஸ்' என்பவருக்கு ஆணையிட்டுள்ளேன். அராபியக் கடற்கரைப் பகுதிகளைத் தொடாத வண்ணம், ஏடனிலிருந்து நேராகச் சென்றிடக் கூடிய வழியினைக் கண்டுபிடிப்பதில் அவர் முனைந்து ஈடுபட்டுள்ளார். அவரது முயற்சி விரைவில் வெல்லும் என நம்புவோமாக! "எத்தனையோ புதுப்புதுத் திட்டங்களால் என் இதயத்தைக் கவர்ந்து விட்ட தங்கள் ஆட்சித் தலைவர், இந்தப் புதிய கடல்வழித் திட்டத்தாலும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார். அவருக்குத் தமிழகத் தின் சார்பில் என் பணிவார்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகி றேன்! பெருமக்களே! தாங்கள் என்மீது பொழிந் திட்ட பாச மழைக்கு காட்டிய கனிவுக்கு அளித்திட்ட மதிப்பிற்கு அள்ளிக் கொடுத்திட்ட ஆயிரமாயிரம் அற்புதப் பரிசுகளுக்கு - என் உளங்கனிந்த நன்றியினை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு உரிமையாக்கி அமர்கிறேன்." - செழியனின் நன்றியுரை முடிந்ததும் 'ரோமாபுரிப் பாண்டியன் வாழ்க!' 'ரோமாபுரிப் பாண்டியன் வாழ்க!' என்னும் வாழ்த்தொலிகள் மறுபடியும் செனேட் மண்டபத்தினை அதிர அடித்தன.