614
கலைஞர் மு. கருணாநிதி
614 கலைஞர் மு.கருணாநிதி "சரிதான் போங்கள்! அதற்குள்ளே அவளுடைய முகத்தையே மறந்து விட்டீர்களா? இதுதான் நீங்கள் தாமரையிடம் கொண்டிருப்பதாகக் கூறிய ஆறாக்காதலுக்கு அழகா?... அர்த்தமா?" "நீ என்ன சொல்கிறாய் முத்துநகை? நனவா கனவா என்று என்னால் நம்பவே முடியவில்லையே! அசல் ஜூனோ மாதிரியே இருக்கிறாளே!" “ஜூனோ மாதிரி என்ன? அசல் ஜூனோவேதான்?” "என்ன புதிர் போடுகிறாய்? தாமரையைப் போய் ஜூனோ என்கிறாயே?" "நீங்கள் தான் ஜூனோவைப் போய்த் தாமரை என்கிறீர்கள்?" -கலகலவென்று கேலியாக நகைத்திட்டாள் முத்துநகை! அவள் இப்படி விடுகதை போட்டுச் செழியனைத் திணற அடிப்ப தைக் கண்டு பொறுக்கவில்லை போலும் புதிதாக வந்து நின்றிட்ட அந்தப் பூவைக்கு. "ஏண்டி இன்னும் அவரைப் போட்டு வாட்டி எடுக்கிறாய்? விரைவாகத்தான் உண்மைகளையெல்லாம் விடுவித்துத் தொலையேன்!' என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் அவள். அடி, அம்மாடி! அதற்குள்ளே அவர் கடுகளவு வாடுவது கூட உனக்கு மலையளவாக வாட்டம் தருகிறதா? அப்படியானால் நீ நடித்திருக்கும் நடிப்பையெல்லாம் நீயே உடைத்துக் கூறு; அப்போதுதான் அவருக்கும் இனிக்கும்; இனிமேல் நான் இங்கே இருந்திடவும் கூடாது!" என்று மொழிந்தவாறே கீழ்த்தளத்தை நோக்கி முத்துநகை பிடித்தாளே ஓட்டம் தனித்துவிடப்பட்ட அந்த இளம் காதலர்களுக்கு முதலில் எப்படி, யார் பேச்சினைத் துவக்குவது என்றே தெரிந்திடவில்லை. வேட்கை தரும் வெப்பத்தால், விம்முகின்ற நெஞ்சத்தால் அவர்கள், ஒருவரையொருவர் விழிகளாலேயே விழுங்கிக் கொண்டனர். உணர்வு களாலேயே தழுவிக் கொண்டனர். தன்னை விட்டுப் பறந்து போய் விட்டதாகக் கருதப்பட்ட கிட்டாதென்று எண்ணப்பட்ட ஆசைக்கிளி இப்படித் திடீரென்று திரும்பி வந்து தன் தோளிலேயே தொற்றிடக்கூடும் என்று செழியனால் எண்ணிப் பார்த்திடவே முடியவில்லை. M இந்தத் தாமரையென்னும் தளிர்க்கொடிக்காக - தமிழ்ச் சிட்டுக்காக - அவன் எத்தனை எத்தனை இரவுகள் இமைக்கூடுகளை மூடிட முடியாமல் உறக்கமே இன்றித் தவித்திருக்கிறான். ஏங்கி ஏங்கிப்