பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

615


1 ரோமாபுரிப் பாண்டியன் 615 பொருமியிருக்கிறான் - புலம்பியிருக்கிறான்! ஏன் இந்த ஜூனோவையே எப்படி எப்படியெல்லாம் புறக்கணித்திருக்கிறான். ஆனால் அதே ஜூனோவாக இந்தத் தாமரைதான் நடித்துக் கொண்டி ருந்தாள் என்பதனை இன்னும் அவனால் நம்பிடவே முடியவில்லை. நனவா கனவா என்னும் திகைப்பும் அவனைவிட்டு முழுமையாக நழுவிடவும் இல்லை. பூம்புகார் அரண்மனையை விட்டுத் தப்பிய இந்தப் பூங்கொடி இந்த ரோமாபுரிக்கு எங்ஙனம் வர முடிந்தது? இங்கே உள்ளவர்களுடன் எவ்வாறு இத்துணை ஈடுபாட்டுடன் இரண்டறக் கலந்து பழகிட முடிந்தது போன்ற ஐயப்பாடுகளும் அவனுள் எழாமல் இல்லை. தொலைவில் நின்றவாறே தன் பார்வையினால் தாமரையின் சந்தனமுக எழிலைப் பருகித் திளைத்திட்ட செழியன் தன் வலக்கரத்தின மேலே தூக்கி ஆள் காட்டி விரலினால் தன்னருகே வந்திடுமாறு அவ ளுக்குச் சைகை காட்டினான். புன்னகையை வழிய விட்டவாறே அவளும் அவனை நோக்கி அன் னம்போல் அசைந்து வந்திட்டாள். அவள் அருகினில் நெருங்கியதும் - "நீ எவ்வளவு பொல்லாத கள்ளி! என்னை எப்படியெல்லாம் ஏமாற்றிவிட்டாய் இந்த ரோமாபுரியிலே" என்று அவளது மிருதுவான காது மடலைப் பற்றித் திருகினான் செழியன். t ஐயோ, வலிக்கிறது! விடுங்கள்!" என்று அவனுடைய விரல்களை விடுவித்துத் தன் கைகளில் ஏந்திக் கொண்டே அவள், "நீங்கள் மட்டும் என்னை ஏமாற்றவில்லையா?" என்று கொஞ்சலாகக் கேட்டாள். "நான் எங்கே உன்னை ஏமாற்றினேன்?" "ஆமாம்.ஆமாம். இப்போது இப்படித்தான் சொல்வீர்கள்! உங்களுக் குத்தான் எல்லாமே மறந்து போயிருக்குமே! ஆனால் பழைய நிகழ்ச்சி களை - அப்போது நீங்கள் அளித்திட்ட வாக்குறுதிகளை - என்னால் இவ்வளவு விரைவில் மறந்திட முடியுமா?" "அப்படியென்ன நான் உனக்கு வாக்குறுதிகளை அளித்துவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் தவறிவிட்டேன்?" “ஏன் தவறிடவில்லை? கரிகாலரைக் கொல்ல முயன்று புகார் அரண் மனையிலே சாவினைத் தழுவிவிட்ட என் அண்ணியாருடைய, ஏன் உங்கள் அக்காளுடைய சவத்தினைக் காணப் புறப்பட்டோமே நினைவி ருக்கிறதா? அந்தப் பயணத்திற்கு முன்னர் இருட் சிறையிலே கிடந்திட்ட உங்களைச் சந்திக்க வந்தேனே. அப்போது என்ன சொன்னீர்கள்? 'நீ பூம்புகாருக்குப் புறப்படும்போது உன்னோடு நானும் வருகிறேன்.