பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616

கலைஞர் மு. கருணாநிதி


616 கலைஞர் மு. கருணாநிதி உன்னுடைய பாதுகாப்புப் படை வீரனாக வருகிறேன். உன்னை ஏமாற்ற மாட்டேன்! உன்னுடனேயே வந்து உன்னுடனேயே திரும்புகிறேன்!' என்றெல்லாம் உறுதியளித்தீர்களே! ஆனால் பிறகு எப்படி நடந்து கொண்டீர்கள்? என்னைவிட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசைந்திடாத பாதுகாப்பு வீரராகத்தான் இறுதிவரை என் அருகிலேயே இருந்தீர்களா? என் கண்ணிலே மண்ணைத் தூவிவிட்டுக் கரிகாலரைக் காப்பாற்றுவதிலேயே நீங்கள் குறியாகிச் செயல்படவில்லையா? தாமரை இவ்வாறு மடக்கியதும், "ஓ, அதைச் சொல்கிறாயா?" என்று கூறுவதைத் தவிர வேறு எந்த மறுப்பினையும் எழுப்பிட இயலாமல் அசடு வழிந்திடச் சிரித்திட்டான் செழியன். 'நான் மட்டும் அவ்வாறு மாறுவேடம் பூண்டு இருங்கோவேளின் சூதுவலையினைக் கிழித்தெறியாமல் போயிருந்தால் இந்நேரம் கரிகாலரின் வாழ்வும் சோழமண்டலத்தின் ஆட்சியும் எப்படி எப்படியோ திசைமாறியிருக்காதா?' என்று எண்ணிக் கொண்டான் அவன். ...ம் அது போகட்டும். நீ எப்படி இந்த ரோமாபுரிக்கு வந்து சேர்ந் தாய்? அதைச் சொல்! கேட்போம்" என்றான் சிந்தனை வலையினின்றும் மீண்டவனாக. 'அதை ஏன் கேட்கிறீர்கள்? அது பெரிய கதை.இங்கு வந்து சேர்வதற் குள் நான் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் புகார் அரண்மனை யிலிருந்து நான் எப்படித் தப்பிச் சென்றேன் தெரியுமா?" "எப்படி" "என்னுடைய அண்ணன் இருங்கோவேளின் ஆட்கள்தான் என்னை அப்படித் தந்திரமாகக் கடத்திச் சென்றார்கள்." "அவர்கள் ஏன் உன்னைக் கடத்திச் சென்றிட வேண்டும்?" "என்னை வீராங்கனையாக்கிக் கரிகாலரோடு பொருதச் செய்து, மீண்டும் வேளிர்குல அரசினை நிறுவிட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் என்னுடைய உள்ளம் அதற்கு இடம் தந்திடவில்லை. கரிகால ரைப் போன்ற கருணை, பெருந்தன்மை, பேராற்றல் படைத்த பேரரசர்கள் தாம் நம்முடைய தமிழ் மண்ணுக்கு உருவான திட்டங்களை வழங்கி உயர்வான வாழ்க்கை வளத்தினைப் பெருக்கிட முடியும் என்று எனக்கு உறுதியாகப்பட்டது. எனவே எங்களுடைய வேளிர்குல ஆட்களின் சதித்திட்டங்களுக்கு நான் இசைந்திட மறுத்துவிட்டேன். அதனால் அவர்களுக்கு என் மீது அடங்காத ஆத்திரம். ஆனால் அவர்கள் தங்கள்