ரோமாபுரிப் பாண்டியன்
617
ரோமாபுரிப் பாண்டியன் 617 ஆத்திரத்தின் விளைவாக என்னை ஏதும் செய்வதற்குள்ளேயே நான் அவர்களுடைய பிடிப்பிலிருந்து தப்பியோடி விட்டேன். சோழ மண்ட லத்திலேயே நடமாடினால் என் தலைக்கு என்றைக்குமே ஆபத்துதான் என்று தோன்றியது. எனவே சில உழவர்பெருங்குடி மக்கள் உறுதுணை யோடு பாண்டிய நாட்டுக்கு ஓட்டம் பிடித்தேன். அப்போதுதான் பசுமலை யில் உள்ள 'அஞ்சினான் புகலிட'த்தில் நான் தங்கிட நேர்ந்தது. எனக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டதாலேயே அங்கே கலவரம் விளைந்திடும் போல் செய்தி எட்டியதால் பின்னர் அங்கிருந்தும் வெளியேறினேன். "ஓர் அறச்சாலையின் திண்ணையில் ஒருநாள் இரவு நான் 'அறிதுயிலில்' புரண்டிட்டபொழுது பாண்டியநாட்டு இளவரசர் இளம்பெருவழுதி என்மீது அளவற்ற காதல் கொண்டிருப்பதாகவும், என் னைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிரமாக அலைகிறார் என்றும் இரு மறவர்கள் உரையாடியது என் செவியிலே விழுந்தது. அதைக் கேட்டதும் எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது!" "அப்படியானால் இளவரசரை உண்மையிலேயே நீ காதலிக்க வில்லையா?" "நான் எப்போது காதலித்தேன்? ஓர் ஆடவருடன் ஒரு பெண் பாசத் தோடு பழகினாலே அது காதலாகி விடுமா? என்னுடைய கண்ணியமான நட்புறவை அவர் தவறாக எடுத்துக் கொண்டு தடுமாறினால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாளி ஆகிட முடியும்? மேலும் நான் காதலித்ததெல் லாம் ஒரே ஒருவரைத்தான்... 'அவர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" - கண்ணைச் சிமிட்டிய வண்ணம் குறும்பு நெளிந்திடக் கேட்டான் செழியன். ஊம்.. அவர் யார் என்று இனிமேல் தான் என் வாயினால் வேறே சொல்ல வேண்டுமாக்கும்!" என்று தன் மோவாயைத் தோளிலே இடித்துக் கொண்டு, முறுவலித்த தாமரை மேலும் தொடர்ந்தாள். 2 "அப்புறம் கேளுங்கள். இந்த இளவரசரின் வேட்டையிலிருந்து இனி எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்னும் பெருந்துயரத்தோடு அலைந் திட்ட நான் எப்படியோ மேற்குக் கடற்கரையிலுள்ள முசிறித் துறைமுகப் பட்டினத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கே பசிக்களைப்பினால் மயக்க முற்று விழுந்துவிட்ட என்னை ஒரு யவனக் கிழவர் வந்து காப்பாற்றி னார். அவர் முன்பே எனக்கு அறிமுகமானவர்தான். என்னுடைய அண்ணனிடம் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தவரே அவர். எங்கள் மரமாளிகைக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த அவரிடம்தான் இத்தாலி மொழியினைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் கற்றுக் கொண்