ரோமாபுரிப் பாண்டியன்
619
ரோமாபுரிப் பாண்டியன் 619 “அவள்தான் உங்களை வரவேற்றவள். பெரும்பாலும் செனேட் கூட் டங்களுக்கும் அரசியல் விழாக்களுக்கும் அவள்தான் வருவாள்; நான் வரமாட்டேன். அதேபோல் உங்களுடன் தனித்து இருக்கக்கூடிய சூழ் நிலைகளில் எல்லாம் நான்தான் வந்திருக்கிறேன். அவள் வந்ததில்லை!” "ஆமாம், மேசனசின் குடும்பத்தைப் பற்றிய சில விவரங்களைக் கேட்டபோது நீ என்மீது எரிந்து விழுந்தது கூட இதனால்தானா? "பின்னே எரிந்து விழாமல் அப்போது நான் என்ன செய்திடமுடியும்? உண்மையான ஜூனோவானால் எல்லா விவரங்களையும் அறிந்து வைத்திருப்பாள்! "தமிழகச் சமையலை கிளியோபாத்ராவிடம் இருந்த போதே ஒரு யவனக் கிழவர் மூலம் கற்றுக் கொண்டதாகக் கூறியதெல்லாம்கூடப் பொய்தானே?" "முழுக்க முழுக்கப் பொய்தான்! அதிலே வேறு சந்தேகமா!" என்று சிரித்திட்டாள் தாமரை. 44 'அது சரி, அந்த ஆடை அலங்காரங்களையெல்லாம் எப்படி அவ் வளவு கச்சிதமாக உன்னால் செய்துகொள்ள முடிந்தது? அதுவும் செம் பட்டையான சுருட்டை முடியை எப்படி உன்னால் வைத்துக் கொள்ள முடிந்தது?” "இந்த ஒப்பனைக் கலையெல்லாம் தமிழகப் பெண்டிருக்கு பெரிய கடினமான காரியமா? ஆனால் என்னுடைய நீண்ட கூந்தலைக் கத்தரித் திட நேர்ந்ததே என்பதுதான் எனக்கு மிகுந்த வருத்தம் அளித்திட்டது. என்ன செய்வது? அகஸ்டஸ் பெருமகனாருக்குச் செய்திடும் ஒரு தியாகமாக இருக்கட்டுமே என்றுதான் அதற்கும் துணிந்திட்டேன்' 'ஆமாம், இப்போது நீ ஜூனோ வடிவத்திலேயே தமிழகத்திற்குத் திரும்பிவிட்டாயே. இனிமேல் அந்த உண்மையான ஜூனோ எப்படிப் பெண்ணுருவிலே நடமாட முடியும்? எந்தக் காலத்திற்கும் அவள் இனி வடையில் தானே இருந்தாக வேண்டும்?" 'அது ஒன்றும் தேவையில்லை. ரோமாபுரிப் பெண்கள் மணவிலக்குச் செய்து கொள்வதுதான் வாடிக்கையான காரியமாயிற்றே? ஆகவே, சிறிது காலம் சென்றதும் தமிழகத்துத் தூதுவரைப் பிடிக்காமல் மணவில்க்குச் செய்து கொண்டு திரும்பிவிட்டதாக அவள் அங்கே மீண்டும் தலையெடுத்துவிடுவாள்! என்று சிரித்திட்டாள் தாமரை. "நீ சொல்வதைப் பார்த்தால் ரோமாபுரியிலே எதையுமே எளிதாக. எடுத்துக் கொண்டு நினைத்ததை முடித்து விடுவார்கள் போல்