ரோமாபுரிப் பாண்டியன்
5
ரோமாபுரிப் பாண்டியன் கற்பனை வேகத்தில் வரலாறு சிதைந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருந்தது. கதையாக மட்டுமன்றி அன்றைய தமிழகத்தின் சரித்திர சித்திர மாகவும் இதனைத் தீட்டியிருக்கிறேன். துணையாக இருந்து குறிப்புகள் தந்து உதவிய நண்பர் மறைமலை யான் மெத்தவும் பயன்பட்டார். அவருக்கும் இந்த பெரிய நூலை அச்சியற்றப் பணியாற்றிய அருமை நண்பர் கவிஞர் ஆனந்தம் அவர்கட்கும் தமிழ்க்கனிப் பதிப்பகத்தாருக்கும் விற்பனை உரிமை பெற்றுள்ள பாரி நிலையத்தாருக்கும் என் நன்றியும் அன்பும் என்றும் உண்டு. இதனைப் படித்துத் தமிழர்கள் தங்கள் கருத்துக்களை அவ்வப்போது வழங்கி என்னை ஊக்கப்படுத்தியிருக்கி றார்கள். அவர்களுக்கு என் வணக்கம். என் ஒவ்வொரு எழுத்தையும் சுவைத்துப் படித்துப் பிறரையும் படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த என் அன்புத் தந்தை முத்துவேலருக்கு இந்த நூல் காணிக்கை சென்னை அன்புள்ள, மு.கருணாநிதி 5