622
கலைஞர் மு. கருணாநிதி
கடற்பயணத்திலேயே இவ்வாறு நெடுநாட்கள் கழிகின்றனவே என்னும் மாளாக் கவலையில் ஆழ்ந்திட்டான் நம் மறத்தமிழன் ரோமாபுரிப் பாண்டியன். - 'தமிழ்த் தாயைப் பேணிக் காத்திடும் தலைமகனை, பாண்டியகுலக் கோமகனை தந்தையினும் மேலாகத் தன்மீது பாசமழையினைப் பொழிந்திடும் பெருவழுதிப்பாண்டியனை 'எப்போது சந்தித்திடு வோமோ, எப்போது சந்தித்திடுவோமோ?' என்று அவனது உள்ளம் துடியாய்த் துடித்திட்டது. எனினும் அந்த வாட்டத்தினை மறக்கடிக்கச் செய்து அவ்வப்போது அவனை உற்சாகத்தில் - கிளர்ச்சியூட்டும் உவகைப் பெருக்கில் - ஆழ்த்தி வந்தது தாமரையின் கனிமுகமே! ஆம்; இரவிலே முத்துநகையோடு உறங்கிய நேரம் தவிர, பகலிலே அவள் பெரும்பாலும் செழியனின் அருகினில் அமர்ந்தே பொழுதினைக் கழித்திட்டாள். ரோமாபுரியில் நிகழ்ந்திட்ட விந்தைகளையும், விளை யாட்டுகளையும், சதிகளையும், சண்டைகளையும், காட்சிகளை யும், ஆட்சி நெறிகளையும் அவர்கள் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து உரை யாடித் திளைத்திட்டனர். வரம்பினை மீறிடாத வகையினில் சிற்சில சமயம் ஓரங்கச் சிறு நாடகங்களையும் நடத்திக் களித்திட்டனர் யாரும் அறிந்திடாமல்! காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட அந்த இன்பப் புனலுக்குக் குறுக்கே மாமியார் வேலையை செய்திடாமல் முத்துநகை யும் கண்டும் காணாதவளாக ஒதுங்கிக் கொண்டாள். ஆனால், ஒரு நாள் காலை - தாமரையின் தாழம்பூ மேனியெழிலையே செழியன் தன் விழிகளால் பருகிக் கொண்டிருக்கும் வேளை. "ஆமாம், அகஸ்டஸ் அவர்கள் அளித்திட்ட எத்தனையோ பரிசு களில் ஒன்றை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா? மற்ற பொருள்களுக்கும் தங்களை யாரும் பார்த்திடவில்லையே என்கிற ஏக்கம் இராதா?” என்று கேலியாக நகைத்திட்டவாறே, தன் கையிலே ஓர்