பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

631


ரோமாபுரிப் பாண்டியன் 631 "இல்லையென்றால், உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் அவர் இவ்வளவு எளிதில் நீங்கள் ரோமாபுரியை விட்டுக் கிளம்பிட இசைந்திருப்பாரா?” அந்த மனிதர் இதைப்பற்றி எதுவுமே என்னிடம் கேட்டிடவும் இல்லை; கூறிடவும் இல்லையே?' "நான்தான் அப்படி அவருக்கு வாய்ப்பூட்டுப் போட்டு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டேன்; மேலும், தாயகம் புறப்படுகிற பரபரப்பில், அவருடன் நீண்டபொழுது உரையாடிட உங்களுக்குத்தான் நேரம் ஏது? அவருக்குத் தான் நேரம் ஏது?" "பார்க்கப் போனால், அந்த மாபெரும் ஆட்சித் தலைவர் நீயும் தாமரையும் என்னவெல்லாம் சொன்னீர்களோ அப்படியெல்லாம்தான் ஆடி இருக்கிறார் என்று தெரிகிறது! நீங்கள் இருவரும் என்னதான் அப்படிச் சொக்குப்பொடி போட்டீர்களோ?" "எல்லாம் உங்களுடைய நன்மைக்காகத்தானே அண்ணா?" "நான் இல்லை என்று மறுக்கிறேனா? அது சரி, முத்துநகை! ஜூனோவைக் கண்டதுமே இவள் தாமரைதான் என்பதை நீ கண்டுபிடித்து விட்டாயா?" ஊகூம்,இவள் இருந்த கோலத்தில் நான் எங்கே இவளை அடையாளம் கண்டுகொள்வது? இவளோடு நான் அகஸ்டசின் இல்லத்திற்குப் படுக்கச் சென்றேன் இல்லையா? அப்போது இவளாகத் தான் தாம் யார் என்கிற உண்மையை வெளிப்படுத்தினாள்; 'தன்னை எப்படியாவது உங்களுடைய பரிசுப் பொருளாக்கித் தமிழகத்திற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கெஞ்சினாள்." முத்துநகை இவ்வாறு மொழிந்திடவும் உடனே தாமரை குறுக்கிட் டாள். 'ஏய். நான் ஒன்றும் உன்னைக் கெஞ்சிடவில்லை. நீதான், "எங்கள் அண்ணனை இப்படியெல்லாம் ஏமாற்றலாமா? அகஸ்டஸ் அவர்களி டம் கூறி எப்படியாவது உன்னைத் தாயகம் கூட்டிப் போய் விடுகிறேன்' என்று சொன்னாய்" "அடிப்பாவி! முழுப் பூசணிக்காயையும் சோற்றில் றைக்கிறாளே! பார்த்தீர்களா செழியன் அண்ணா! எப்படிப் பொய் பேசுகிறாள் என்று? அது இவள் குற்றம் இல்லை; எங்கள் பெண்ணினத்திற்கே உரிய அகங்காரத்தின் அழியாத சின்னம் அது. பெண் என்பவள் தானாக ஓர் ஆடவனை நாடிச் செல்வது இழுக்காம்; அதனால் ஆடவன் மீது என்னதான் அன்பிருந்தாலும் அனைத்தையும் மனதுக்குள்ளே மறைத்துக் கொண்டு, அவன் தானே தன்னை நாடி வரும்படி நடிப்பதுதான் சிறப்பாம்? என்ன மாய்மாலமான எண்ணங்கள்!"