பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

633


ரோமாபுரிப் பாண்டியன் 633 "உன்னுடைய திட்டம்தான் என்ன? அதை முதலில் சற்று விளக்கமாகத்தான் சொல்லிவிடேன்." இவள்மீது பைத்தியமாகவே அலைந்திடும் இளவரசருக்கு இவள் தன்னைக் காதலிக்கவில்லை, உங்களைத்தான் காதலிக்கிறாள் என்ற கசப்பான உண்மையினை எந்த வகையிலும் செரித்துக் கொள்ளவே முடியாது. உங்களோடு இவள் தாயகம் திரும்பிடுவதைக் கண்டாலே அவருக்கு ஆத்திரம் சீறிக்கொண்டுதான் வரும். தம்முடைய அரசியல் ஆதிக்கத்தினைப் பயன்படுத்தி இவளை உங்களிடமிருந்து பறித்துக் கொள்ள முயற்சி செய்தாலும் செய்திடக் கூடும். அத்தகைய நிலைமை களுக்கு இடம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் எனக்கு ஒரு வழிதான் புலப்படுகின்றது." 1 “என்ன வழி அது?" “நாம் பாண்டிய நாட்டை அடைந்தவுடனேயே இளவரசருக்குத் திருமணம் நிகழ்ந்திட நாமே எவ்வாறேனும் ஏற்பாடு செய்திட வேண்டும்."

"அதற்கு அவர் இசைந்தால்தானே?" 'அவரை இசைய வைப்பதில்தான் நம்முடைய திறமையே இருக்கிறது! "தாமரை, யவனக்கிழவர் ஒருவரோடு ரோமாபுரிக்கே ஓடிவிட்டாள் என்றும், அங்கே இத்தாலிய வீரன் ஒருவனை மணந்து கொண்டு இன்பமாக வாழ்கிறாள் என்றும் கூறி விட வேண்டும்!' "அய்யய்யோ! அந்த அவமானத்தையெல்லாம் என்னால் தாங்கிட முடியாது; நான் எதற்கு அப்படியெல்லாம் 'ஒழுக்கங்கெட்டவள்' என்று பெயர் எடுத்திட வேண்டும்?" என்று கொதிப்புடன் சீறினாள் தாமரை. சரி! அப்போது இப்படிக் கூறலாம்; நீ யவனக் கிழவரோடு ரோமாபுரிக்குத் தப்பிச் சென்றதாகவும், வழியிலே நடுக்கடலிலே விழுந்து தற்கொலை புரிந்து கொண்டதாயும் கதை கட்டி விடலாம்." "ஆனால் இந்தக் கதையை அவர் நம்பிட வேண்டுமே?" என்றான் செழியன். "அவர் நம்பும்படியாகத்தான் நாம் சில தந்திரங்களைச் செய்திட வேண்டும். யாராவது ஒரு யவனக்கிழவரைப் பிடித்துத் தாமரை தற்கொலை புரிந்து கொண்டதைத் தாம் கண்ணாரக் கண்டதாக இளவரச ரிடமே நேரில் வந்து சொல்ல வைத்திடத்தான் வேண்டும். அப்போது தான் அவர் தாமரையைப் பற்றிய ஆசைக் கனவுகளை அறுத்தெறிவார்.