634
கலைஞர் மு. கருணாநிதி
634 கலைஞர் மு. கருணாநிதி இன்னொரு பேரழகியை அவருடைய தலையிலே கட்டிவிட வேண்டிய துதான், அவளுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் பிறகு தாமரை யைப் பற்றிய மோகத் தீ அவரிடம் தானாகத் தணிந்துவிடும் - அவிந்துவிடும். அதுவரைக்கும் இவள் ஜூனோவாகத் தான் நடமாடிட வேண்டும்." "அடி அம்மா! அத்துணை நெடுங்காலத்திற்கு இந்த இத்தாலிய உடையிலேயேதான் நான் சிறை இருந்திட வேண்டுமா? முடியாது!" என்று எதிர்ப்பினை எழுப்பினாள் தாமரை. "வேறு என்ன மாற்றுவழி இருக்கிறது? நீ உன் உண்மையான உருவத்தில் - தாமரையாகவே பாண்டிய நாட்டில் அடியெடுத்து வைத் தால் இளவரசர் வாளா விடுவாரா? பிறகு செழியன் அண்ணாவுக்கும் அவருக்கும் தீராப்பகையே கொழுந்துவிட்டு எரியாதா? அதனைப் பயன்படுத்திக் கொண்டு தளபதி நெடுமாறர் குறுக்கே புகுந்து கொலு வேறிட முற்பட்டுவிட்டால் என்ன செய்வது? எல்லா விளைவுகளையும் எண்ணிப் பார்த்துத்தான் நான் இப்படித் திட்டமிடத் துணிந்தேன்." முத்துநகை இவ்வாறு அழுத்தமாக மொழிந்திடவும் தங்களுக்கும் வேறு வழியெதுவும் தோன்றிடாத அந்த இளங்காதலர்கள் ஒருவரை யொருவர் இரக்கத்தோடு பார்த்துக் கொண்டனர். அந்த நெடிய கடற்பயணம் முடிவுற்று, அவர்கள் மூவரும் கொற் கைத் துறைமுகத்தினை மிதித்திட்டபோது அங்கே அவர்களுக்காக முர சங்கள் முழங்கிடவில்லை: முழவுகள் அதிர்ந்திடவில்லை; குயில்கள் கூவிடவில்லை; கொம்புகள் பிளிறிடவில்லை; ஒரு வா பாழ்த்துப்பா இல்லை; வரவேற்பு மாலை இல்லை. பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையம்பதியினை அவர்கள் அடைந்திட்ட பொழுதோ- அங்கே இன்னும் இழையோடிற்று? பயங்கரமான இடுகாட்டு அமைதியே