ரோமாபுரிப் பாண்டியன்
637
ரோமாபுரிப் பாண்டியன் 637 கரிகாலனுக்குப் பின்னால் உள்ள பெருந்தூணுக்குத் தன் வலக் காலை முட்டுக்கொடுத்திட்டவாறு அதனோடு சாய்ந்து தலை கவிழ்ந்து நின்றிருந்தான் இளவரசன் இளம்பெருவழுதி. அவனுடைய விழிகள் அருவிகளை வழியவிட்ட சுவடுகள் அவனது கன்ன மேடுகளில் நன்கு தெரிந்தன. கூடத்தில், ஆங்காங்கே அமைச்சர்கள், அரையர்கள், படைத் தளபதிகள், நாடு வகை செய்வோர், வரியியலார், மருத்துவர், புரருரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் - துயரங்கப்பிய முகத்தோடு நின்றிருந்தனர். தளபதி நெடுமாறன் மட்டும் ஓரிடத்தில் நில்லாமல் பொறுமை இழந்தவனாக - அமைதி அழிந்தவனாக - அங்குமிங்குமாக நடை பழகிக் கொண்டிருந்தான். கண்ணீரும் கம்பலையுமாக, அந்தக் கூடத்தினுள் ஓடி வந்திட்ட செழியன், தன்னையும் மீறி, "அரசே! அரசே!' என்று கூவிவிட்டான். அந்தத் தழுதழுத்த குரலைக் கேட்ட அளவிலேயே அங்கிருந்த அத்தனை பேருடைய உடலுமே சட்டென்று சிலிர்த்து விட்டன; அவர்களுடைய கண்களும் குளமாகி விட்டன. ஆனால் நெடுமாறன் மட்டும் அத்தகைய சலனம் எதற்கும் ஆட்பட்டுவிடாதவனாக, பாய்ந்து வந்திட்ட செழியனின் குறுக்கே போய் மறித்துக்கொண்டு. 'இப்படியெல்லாம் கூச்சல் போடாதே! மன்னர் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்; அவரது அமைதியைக் கெடுத்திடலாமா?” என்று தணிந்த குரலில் தனக்குரிய அதிகாரத்துடன் பகர்ந்திட்டான், நெடுமாறரே! செழியனைச் சற்று அருகே வரவிடுங்கள்! எவ்வளவோ தொலைவிலிருந்து வந்திருக்கின்ற அவன் இந்தக் கடைசி நேரத்திலாவது தனக்கு வாழ்வளித்திட்ட அரசனின் முகத்தினை ஆசை தீரப் பார்த்திட வேண்டமா? சற்று அழுத்தமான குரலிலேயே அறைந்திட்டான் கரிகாலன். உடனே ஒதுங்கி நின்று செழியனுக்கு வழிவிடுவதைத் தவிர, நெடுமாறனுக்கு வேறு வழியில்லை. கட்டிலின் அருகே சென்று, கரிகாலனை ஒட்டி நின்றிட்ட செழியன், பற்றி உலர்ந்திட்ட பெருவழுதிப் பாண்டியனின் முகத்தினைக் காணக் காணத் துயர் தாளாமல், சிறு குழந்தைப் போல் தேம்பித் தேம்பி அழ முற்பட்டுவிட்டான்.