638
கலைஞர் மு. கருணாநிதி
638 கலைஞர் மு. கருணாநிதி எத்தனையோ போர்க் களங்களிலே எதிரிகளை முறியடித்து வெற்றி மங்கையினைத் தழுவி, வேப்பம்பூ மாலையினைச் சூடிக் களித்திட்ட வீரத்திலகம் - பாண்டியப் பேரரசன் இப்படிப் பிணியென்னும் களத்திலே 'இறப்பு' என்னும் கொடும்பகையோடு இறுதிப் போர் நிகழ்த்திடும் அவலக் காட்சியினைக் கண்டிடும்பொழுது செழியனால் அழாமல் எப்படி இருந்திட முடியும்? கரிகாலன், தன் முகத்தைச் சற்றுத் தாழ்த்தி, "இதோ செழியன் வந்துவிட்டான்! செழியன் வந்துவிட்டான்!" என்று உரக்கவே குரல் கொடுத்திட்டான். பின்னர், பெருவழுதியின் செவி மடலிலே தன் உதடுகளைப் பொருத்தி ஏதோ ஒரு சொல்லினை உரைத்திட்டான். அந்த ஒரு சொல்லுக்கு என்னதான் மந்திர சக்தியோ, மாய வித்தையோ? உடனே, பாண்டிய வேந்தனின் இமைக்கூடுகள் மெல்லத் திறந்தன. நிலம் பார்த்திட்ட வெளிறிய விழிகள் செழியனின் முகத்தினைத் துழாவிப் பிடிக்க முயன்றன. சட்டென்று அவரது பார்வையிலே மின்னித் தெறித்திட்டது ஓர் ஒளி வீச்சு! முன்பொருநாள், "நெடுந்தூரத்திற்கு அப்பால் உள்ள செழியனை எவ்வாறு கடிதில் கொணர்ந்திட முடியும் என்பதுதான் கவலையினை அளிக்கின்றது..." என்று புலவர் காரிக்கண்ணனார் தயக்கத்துடன் மொழிந்திட்ட போது - 'ஏன்? அவன் வருகின்றவரை இந்த உடம்பிலே என் உயிர் தங்குமோ என்னவோ என்று அஞ்சுகிறீர்களா?... ஆனால், புலவர் அவர்களே! நான் இப்பொழுது கூறுவதை நன்றாக உங்கள் மனத்திலே பதிய வைத்துக் கொள்ளுங்கள். செழியனின் முகத்தினைக் கடைசியாக ஒரு முறையேனும் கண்டிடாமல் என் கண்கள் கண்டிப்பாய் மூடிட மாட்டா..." என்று பெருவழுதி உயிரோடு இயம்பினானே அந்தப் பெருநம்பிக்கை நிறைவேறிவிட்ட பெருமிதம் சுடர்விட்டது, அவனு டைய அந்த ஆழமான பார்வையில். அடுத்த கணமே- <1 'அய்யோ! அரசே!" என்று அலறியவாறே அவன் மார்பு மீது விழுந்திட்டான் செழியன். மலைசாய்ந்த(து) அய்யோ! எம் மாத்தமிழின் உள்ளீரல்