பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640

கலைஞர் மு. கருணாநிதி


640 கலைஞர் மு. கருணாநிதி பொதுவாக, ஒரு மன்னர் இயற்கை எய்தியதும் அவரது பிள்ளை பட்டம் சூட்டிக் கொள்வதே அக்காலத்தில் மரபு. மன்னருக்கு வழித் தோன்றல் - வாரிசு யாரும் இல்லையென்றால்தான் பிற ஏற்பாடு களுக்கு இடம் உண்டாகும். இங்கோ, பெருவழுதியின் பிள்ளை, இளவரசன் இளம் பெருவழுதி மலைபோல இருக்கிறான். அவனை நெட்டித் தள்ளிவிட்டுத் தானே அரியணையில் ஏறுவதற்கு நெடுமாறன் அடம்பிடிப்பதைக் கண்டிடும் பொழுது யாருக்குத்தான் அதிர்ச்சியும் ஆத்திரமும் உண்டாகமாட்டா ஆனால், குழப்பநிலை மிகுந்த உச்சக் கட்டத்தை எட்டிட, கடைசி நேரத்தில் கரிகாலன் - காரிக்கண்ணனார் முன்னிலையில் தன் பேரா சைக்கு அவன் காட்டிய காரணங்கள் எல்லாரையும் வியப்படையச் செய்ததோடு திடுக்கிடவும் வைத்துவிட்டன! பெருவழுதிப் பாண்டியர் உயிரோடு இருந்தவரையில் நான் அவருடைய நிழலாகவே தொடர்ந்திருக்கிறேன் துணை புரிந்து வந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் தென் வெள்ளாற்றங் கரையினை ஒட்டிய 'முத்தூர் கூற்ற' த்தினை ஆண்டிட்ட வேளிர்குலக் குறுநில மன்னன் நம்முடைய பாண்டிய வேந்தரின் உயிரினைப் பறித்திட முயன்றதை இன்று பலர் மறந்திருக்கலாம். அப்போது அவருக்கு அரணாக, கேடயமாக, தற்காப்பு அளித்துக் காப்பாற்றியவர் யார்? நானேதான்... என்னுடைய தீரச் செயலையும், அரசரிடம் நான் கொண்ட ஆழ்ந்த பற்றுதலையும் மெச்சிய அவர், 'நெடுமாறா! உன்னைப்போல் உற்ற துணை இந்த உலகில எனக்கு எவருமே இல்லை. ஆகவே, என் அருகிலேயே நீ எப்போதும் இருந்திட வேண்டும். அதற்குத் தக்கவாறு உன்னை உரிய நேரத்தில் தளபதியாக உயர்த்தி விடுகிறேன்; அது மட்டும் அல்ல: என்னைச் சாவு வந்து நெருங்கிடும்பொழுது நீ தான் இந்த பாண்டிய மண்டலத்தை எனக்குப் பின்னர் ஆள்கின்ற அருகதை படைத்தவன் என்று 'இறுதிமுறி' எழுதி வைத்துவிடுகிறேன்' என்று வாக்கு அளித்திட்டார். ஆனால், அவருக்கு முடக்குவாத நோய் வந்து, கைகளிலே நடுக்கம் ஏற்பட்டுவிட்டதால் கடைசிக் காலத்தில் தாம் சொன்னவாறு "இறுதிமுறி" எழுதிவைத்திட முடியவில்லை. மற்றபடித் தாம் இயம்பியவாறே அவர் என்னைத் தளபதியாக உயர்த்தி வைத்ததை எல்லாருமே அறிவார்கள். ஆகவே மறைந்த மன்னரின் எண்ணப்படி இந்த மாமண்டலத்தை இனிமேல் ஆளவேண்டியவன் நானே என்பதில் எத்தகைய ஐயப்பாட்டிற்கும் இடம் இருக்கவே தேவை இல்லை; நீங்கள் எல்லாருமே இளவரசன் இளம்பெருவழுதிதான் அரியணைக்கு உரியவர் என்று