பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644

கலைஞர் மு. கருணாநிதி


644 . கலைஞர் மு. கருணாநிதி அமைச்சர்கள், திருமுகம் வரைவோர் - அரையர் - முதலான அரசு அதிகாரிகள், அறங்கூறு அவையத்தினர், தளபதி நெடுமாறர், இளவரசர் இளம்பெருவழுதி ஆகியோரது பார்வைக்கு இந்த இறுதி முறி அனுப்பி வைக்கப்படுகின்றது. மேலோட்டமாக விழிகளை ஓடவிட்டாலே இதிலே உள்ள எழுத்துக்களும் சரி, கையொப்பமும் சரி, மன்னருடையவை தானா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் இல்லை. பார்வையிட்ட பின் னர் எவருக்கேனும் மறுப்பு இருக்குமானால் உடனே தெரிவித்திடலாம்." - கரிகாலன் இவ்வாறு இயம்பியவாறே முதலில் தளபதி நெடுமாற னிடமே அந்த ஓலைச்சுவடிகளை அளித்திட்டார். அவற்றை அப்படியும் இப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் புரட்டிப் பார்த்திட்ட அவனுக்கு எத்தகைய மறுப்பினை எழுப்பிடுவது என்றே புரிந்திடவில்லைபோலும்! நொடிக்கு நொடி வெய்யில் பட்டு வெம்பிய மாம்பிஞ்சாக அவனது முகந்தான் வெளிறியதேயன்றி வாயிலிருந்து எந்த ஒரு வார்த்தையும் வந்திடவில்லை. இயல்பாகவோ தூண்டப்பட்டோ, ஒருவருடைய உள்ளத்திலே பேராசைத் தீ என்னதான் கொழுந்துவிட்டு எரிந்திட்ட போதிலும், மனச்சாட்சி என்னும் கருங்கல் பாறையினை அதனால் கரியாக்கிட, இரையாக்கிட முடிந்திடுமா? அத்தகைய ஓர் உண்மையினைத்தான் நெடுமாறனின் அமைதி, கூறாமல் கூறியது. தான் பார்த்து முடித்திட்ட பிறகு அந்த ஓலைச்சுவடிகளை இளம்பெருவழுதியிடம் அவன் நீட்டினான். இளவரசனுக்கும் தன் தந்தையின் கையெழுத்தினைப் பற்றி எத்தகைய ஐயப்பாடும் எழுந்திடவில்லை. அமைச்சர்கள், அறங்கூறு அவையத்தார் முதலான மற்றையோரும் அது பெருவழுதியால் எழுதப்பட்டதே என்று உறுதி செய்தனர். இறுதிமுறி இவ்வாறு சோதனை செய்யப்படும் பொழுதே முத்துநகையின் நெஞ்சத் திரையிலே என்ன நிழலாடிற்று தெரியுமா? .என் தந்தையார் தந்திட்ட தகவலின் அடிப்படையில், ரோமாபுரி ஆட்சித் தலைவர் அகஸ்டஸ் அவர்களிடமும், கப்பலில் வரும்பொழுது செழியன் அண்ணாவிடமும் நான் தெரிவித்திட்ட அந்த இரகசியச் செய்திக்கு இந்த இறுதிமுறி ஒப்புதல் முத்திரை அளித்திட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்னும் கவலையே கொண்டாள் அவள்.