பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

645


ரோமாபுரிப் பாண்டியன் 645 இறுதிமுறியினைப் பார்வையிட்டவர்களிடமிருந்து எத்தகைய எதிர்ப்பும் வராமற்போகவே கரிகாலன் எழுந்து, "அறிவு சான்ற அவை யோரே! இனி நானே இதனைப் படித்திடலாம் என்று கருதுகிறேன்' என்றான். சோழப் பேரரசனின் மிடுக்கான குரல் சட்டென்று அந்த அரண்மனை மண்டபத்திலே அமைதியைக் கொணர்ந்திட்டது. எல்லாரும் செவி களைத் தீட்டிக் கொண்டு உன்னிப்பாகக் கேட்டனர். பெருவழுதிப்பாண்டியர் தமது கடைசிக்கால விருப்பமாக மட்டு மின்றித் தம் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமாகவும் அந்த இறுதி முறி யினை எழுதியிருந்தார். சில குறிப்பிடத்தக்க பகுதிகள் மட்டும் இங்கே கொடுக்கப்படுகின்றன. இளமைத் துடிப்பிலே நம்மை அறிந்தோ அறியாமலோ நாம் இடறி வீழ்கின்ற காலங்களும் உண்டு. அத்தகைய இடறல் என் வாழ் விலும் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை முத்துக் குளிப்பு விழாவினைக் கண்டுகளித்திடுவதற்காக நான் என் மனைவி பெருங்கோப்பெண்டுடன் கொற்கைப் பட்டினத்திற்குச் சென்றிருந்தேன்; அப்போது தென்வெள் ளாற்றங் கரையினை ஒட்டிய முத்தூர்க் கூற்றத்தினை ஆண்ட குறுநில மன்னனின் குடும்பத்தினரும் அங்கே வந்திருந்தனர். அவர்களிடம் என் மனைவிக்கு அளப்பரிய பாசம் உண்டாகிவிட்டது. எங்கள் சிறிய அரண்மனையிலேயே அவர்களும் தங்கிக்கொள்வதற்கு இவள் ஏற்பாடு செய்துவிட்டாள். அவர்களில் அந்தக் குறுநில மன்னனின் தங்கை முல்லைக்கொடியாள் ஒரு முழுநிலவு; கட்டழகியான அவள் ஒரேயொரு பெண் மகவைப் பெற்ற அளவிலேயே கைம்பெண்ணாகித் தான் பிறந்த அரண்மனைக்கே திரும்பி வந்துவிட்டாள். ஒரு நாள் மாலை, என் மனைவியும் மற்றவர்களும் கடற்கரைக்கு வேடிக்கை காணச் சென்றிருந்தனர். காய்ச்சல்கண்டிட்ட தன் பெண் மகவைக் கவனித்துக் கொண்டு, தனித்து இருந்திட்ட அத்தளிர்க் கொடியாளை நான் என் இளமைக்குப் பலியாக்கிக்கொண்டு விட்டேன். ஆனால், அதுகாறும் பிள்ளை ஏதும் இல்லாதிருந்த நான் அவளை இரண்டாந்தாரம் ஆக்கிக் கொள்வதாகவும் உறுதி அளித்திட்டேன். அதனை நம்பித்தான் அவளும் எனக்கு இணங்கினாள். ஆனால், என் மனைவியிடமோ மறுமணத்தைப் பற்றிய பேச்சையே என்னால் எடுத்திட முடியவில்லை. தானும் அப்போது கருத்தரித்திருப்பதாக அவள் கூறியதே அதற்குக் காரணம். பின்னர் முல்லைக்கொடியாள் தன் அண்ணியின் துணையோடு எவருக் கும் தெரிந்திடாமல் ஒரு முத்துக்குச் சிப்பியானாள். எனினும் கூட, அவ மானத்தைத் தாங்கிட முடியாமலும், அண்ணன் என்ன செய்திடுவானோ ய