646
கலைஞர் மு. கருணாநிதி
646 கலைஞர் மு. கருணாநிதி என்னும் அச்சத்தினாலும் அவள் எங்கோ ஓடி மறைந்து விட்டாள். அவ ளுக்குப் பிறந்த அந்த இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய கண்மணி களாகவே கருதி வளர்த்திடலானாள் அக்குறுநில மன்னனின் மனைவி. இதற்கிடையில், முல்லைக் கொடியாளைக் கெடுத்தவன் நான்தான் என்கிற உண்மை அவளது அண்ணனுக்கு எட்டிவிட்டது. என்மீது தீராப் பகைமை கொண்டுவிட்ட அவன் எப்படியேனும் என்னைப்பழி தீர்த்துக்கொள்ள முனைந்திட்டான். அந்த நேரத்தில், எனக்கு உறுதுணையாய் இருந்து உயிரைக் காப்பாற்றியவன் நெடு மாறனே. அந்த நன்றிக் கடனைக் கழித்திடவே அவனைத் தளபதியாக உயர்த்தி வைத்திட்டேன்!” கரிகாலன் இவ்வாறு படித்திடும்பொழுதே நெடுமாறன் குறுக்கிட்டான்: "பார்த்தீர்களா,பார்த்தீர்களா! நான் உங்களிடம் உரைத்தவை யெல்லாம் உண்மையே என்பதற்குப் பாண்டிய வேந்தர் குறிப்பிட்டுள்ள இந்த நிகழ்ச்சியினை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?" என்று உற்சாகம் பொங்கிடக் கூவினான். 'சற்றுப் பொறுங்கள் தளபதியாரே. இன்னும் எஞ்சியுள்ள சுவடிகளையும் படித்து விடுகிறேன். பிறகு நீங்கள் உங்கள் கருத்தினைத் தெரிவித்திடலாம்" என்ற அவர், மேலும் தொடர்ந்திட்டார். "காலப்போக்கிலே, முத்தூர்க்கூற்றக் குறுநில மன்னனின் சதி என்னைச் சாய்த்திடவில்லை; அவனையே மாய்த்திட்டது. என்னுடைய படைவீரர் களால் அவனுடைய கொற்றம், கொடிமரம், அரண்மனை, அந்தப்புரம் எல்லாமே தகர்த்தெறியப்பட்டன. அந்த அமளியிலே தப்பியவர்கள் முல்லைக்கொடியாளின் பிள்ளைகளே! ஆனால், அந்த இருவரும் திசைக்கு ஒருவராகத் தெறித்து ஓடிவிட்டனர். வயதில் பெரியவளான அந்தப் பெண் தங்கள் கூற்றத்தினை அடுத்த 'மிழலைக் கூற்ற'த்தினை ஆண்டு வந்த இருங்கோவேளிடம் அடைக்கலம் புகுந்து விட்டாள் என்பதனை அப்போதே நான் கேள்வியுற்றேன். அவள்தான் பின்னர் இருங்கோவேளின் பட்டத்தரசியான பெருந்தேவி ஆனாள். அவளுடைய தம்பியும் முல்லைக் கொடியாளுக்கும் எனக்கும் பிறந்தவனுமான சிறுவன், தன் தமக்கை என்ன ஆனாள் என்பதே தெரியாத நிலையில் ஒரு மீனவர் குடும்பத்தினால் காப்பாற்றப் பட்டிருக்கிறான்; அவனே பாண்டிய நாட்டுப் படைவீரனாக மாறிய செழியன்!" M சோழப் பேரரசன் இவ்வாறு படித்திடும்பொழுதே மண்டபத்தில் குழுமியிருந்த அத்தனை பேருடைய வருடைய உடலுமே புளகமுற்றுச் சிலிர்த்திட்டது.