பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

647


ரோமாபுரிப் பாண்டியன் 647 அதே சமயம் தாமரையின் நினைவு வானிலும் பழைய நிகழ்ச்சி யொன்று மின்னலாய்ப் பளிச்சிட்டது. தன் அண்ணன் இருங்கோவேளின் இருட்சிறையிலே செழியன் சிக்கியிருந்த வேளையிலே, கரிகாலனைக் கட்டாரியால் மடித்திடச் சென்ற பெருந்தேவி, தானே மடிந்திட்ட செய்தியினைக் கேட்டவுடனே செழியன், 'அக்கா !அக்கா!' என்று அலறினான் அல்லவா? அதற்கான விளக்கத்தினை கேட்டபொழுது, 'தாமரை! என்கதையில் நீ இதுவரை கேட்டறியாத புதுமையும் பயங்கரமும் நிறைய உண்டு. தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதே. ஒரு காலம் வரும். அந்தக் காலம், நாமிருவரும் பேசக்கூடிய சூழ்நிலையொன்றை வகுத்துத் தருமானால், அப்போது விளக்குகிறேன். உன் அண்ணி என் அக்காள் என்பது மட்டும் உண்மை...! என்று அவன் கூறியது அவளுடைய காது மடல்களிலே மீண்டும் மீண்டும் இப்போது வந்து எதிரொலித்தது. ...அப்படியானால், எங்கள் மரமாளிகைக்குச் சிறைப்பட்டு வந்த செழியனைத் தன் தம்பிதான் என்று அண்ணி ஏன் கூறிடவில்லை? இவரும் தம் தமக்கை அரசியாக இருந்திட்ட பொழுது அப்படியெல்லாம் ஏன் சாதாரண மறவராக அவதிப்பட்டிருக்க வேண்டும்?' என்று தாமரை யால் எண்ணாமலும் இருந்திட முடியவில்லை. ஆனால் அவளது ஐயப்பாடுகளுக்கு அவளுடைய மனமே மறுமொழி அளித்திட்டது. ...சின்னஞ்சிறு வயதிலே எப்போதோ தன்னை விட்டுப் பிரிந்திப் தன் தம்பியை, வளர்ந்துவிட்ட நிலையில் அத்துணை எளிதாக அண்ணி யால்தான் எப்படி அடையாளம் கண்டிருக்க முடியும்? மேலும் நோயாளி யாகப் பெரும்பாலும் படுக்கையிலே கிடந்திட்ட அவளுக்குச் சிறைப்பட் டிருந்த செழியனைத் தனித்துச் சந்தித்து உரையாடிடும் வாய்ப்புத்தான் ஏது?.. செழியனுக்கும் பல ஆண்டுகள் கழித்துத் தன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த மீனவக் குடும்பத்தாலோ, பிறராலோ இருங்கோ வேளின் மனைவி தன் தமக்கைதான் என்கிற உண்மை மட்டும் தெரியவந் திருக்கலாம். ஏழை மீனவப் பையனாகவே வறுமையில் வாடி பழக்கப் பட்டு விட்டதால் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்துவிட்ட அவனுக்கு அரண்மனைக்காரர்களிடம் உறவு கொண்டிடும் ஆசையினை அவனுடைய தன்மான உணர்வே தடுத்திருக்கலாம். அத்தோடு. பாண்டிய வேந்தரின் நம்பிக்கைக்குரிய படைவீரனாகத் தான் மாறி விட்ட பிறகு, அவருடைய நண்பரான கரிகாலரின் உயிரையே பறித்திடச் சதி புரிந்து, நாடோடி வாழ்க்கை வாழ்ந்திட்ட என் அண்ணியிடம் வந்து பழைய உறவு முறைக்குத் தான் உயிர் கொடுக்க முனைவதால் பாண்டிய மன்னரின் நல்லெண்ணத்தை இழந்திட நேருமோ என்னும் அச்சத்தாலும் செழியன் ஒதுங்கி இருந்திருக்கலாம்'