பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

653


ரோமாபுரிப் பாண்டியன் - 653 துணிவுக்குப் பெயர் பெற்றோன் - துயர் உறுவார் தமைத் தூக்கும் கனிவுக்குப் பெயர் பெற்றோன் - கற்றடங்குஞ் சான்றோரின் பணிவுக்குப் பெயர் பெற்றோன் - பாண்டிவள நாடாளும் மணிமுடிக்கு உரிமை பெற்றோன் - மறத்தமிழன் செழிய னன்றோ! -அவனோ, அரியணைதான் கிட்டிவிட்டதே என்று உடனே ஓடிப்போய் அதிலே அமர்ந்திடவில்லை; பதவிச் செருக்கோடு தலை நிமிர்ந்திடவும் இல்லை. தனக்கு இரு புறங்களிலும் எதிரிலேயும் உள்ள பெரியார்களையும், பேரறிஞர்களையும், பொதுமக்களாகிய உடன்பிறப்புகளையும் நோக்கிப் பணிவோடு வணக்கம் புரிந்திட்டான்; பின்னர், தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு இவ்வாறு உரைக்கலுற்றான்; 1 "பெரியோர்களே, நண்பர்களே! பெருவழுதிப்பாண்டியரின் பேரன் பும், உங்கள் அத்தனை பேருடைய பாசவெள்ளமும் என்னைப் பேசவிடா மல் திணற அடிக்கின்றன; இன்பவேதனையிலே என் இதயத்தை விம்ம வைக்கின்றன. பெரியோர்களே! நான் மணிமுடியினைத் தரித்துத்தான் ஆக வேண் டும் என்பதில்லை. சாதாரண மனிதனாக நடமாடியும் எத்தனையோ அருஞ்செயல்களை எல்லாம் இயற்றிடலாம். ஆம்; அந்த முடிவுக்குத் தான் நான் வந்துவிட்டேன். இதுகாறும் கொற்கைப் பட்டினத்து இளவரச ராகப் பட்டம் சூட்டப் பெற்றவர்களே இங்கே பாண்டிய வேந்தராகக் கொலுவேற்றிருக்கிறார்கள். பெருவழுதிப் பாண்டியர் என்னதான் எனக்காக எழுதியிருந்தபோதிலும், அந்த அருமையான மரபினை நான் அழித்திடலாமா, அதன் மூலம், இளம்பெருவழுதிதான் மறைந்த மாமன் னரின் மகன் என்றும், அதனாலே அவர்தான் அடுத்த பேரரசராக அரி யணை ஏறிடுவார் என்றும் பெரும்பாலான பொதுமக்கள் கொண்டிருக் கும் நம்பிக்கையை நான் தகர்க்கலாமா? இளவரசர் அவர்களின் ஏக்கத்திற்கும் நான் இடம் அளித்திடலாமா? ஆகவே அவரே இப்போது மணிமுடியினைச் சூடிக் கொள்ளட்டும். ஓர் எளிய தொண்டனாக அவருக்கு எல்லாவகையான ஒத்துழைப்பும் நல்கிடுவதற்கு நான் என்றுமே காத்திருக்கிறேன். என்னுடைய இந்த முடிவிலிருந்து மாறிடு மாறு வற்புறுத்த வேண்டாமென்று சோழப் பேரரசர் அவர்களையும், மற்ற பெரியவர்களையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்' -என்று உறுதியான குரலில் உரைத்திட்ட செழியன், அரியணை மேடையினைவிட்டுக் கிடுகிடுவென்று கீழே இறங்கித் தன் இருக்கை யினை நோக்கி நடந்திட்டான்.