பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654

கலைஞர் மு. கருணாநிதி


654 கலைஞர் மு. கருணாநிதி அவனுடைய அந்தத் துறவுப் போக்கினைக் கண்டு அரண்மனை மண்டபமே திடுக்கிட்டுப் போய் ஆறாத்துயரில் ஆழ்ந்துவிட்டது. பதவி மோகத்தினைத் தூசென உதறித் தள்ளிடும் அவனுடைய தன்னல மறுப்பு திண்ணிய உள்ளம் திடீரென்று அவனுடைய புகழொளியை விண்ணளவு வீசிடச் செய்துவிட்டது. கரிகாலனும் காரிக்கண்ணனாருமோ பொதிகை மலையினும் உயர்ந் துவிட்ட செழியனின் விரிந்த நெஞ்சினுக்குத் தலை வணக்கம் செய்கின் றவர்களைப்போல அப்படியே வாயடைத்துப் போய்விட்டனர். 'மலைவாழைத் தமிழுக்கும் மாண்புமிகு திராவிடர்க்கும் தலைகொடுக்கத் தயங்காதவன்; தாரணியின் புகழ் சேர்த்தான்; கொலுவேறும் வாய்ப்பிருந்தும் கொள்கையொன்றே உயிர் மூச்சாய் நிலைகுலையா நெஞ்சோடு - நெடும்பயணம் தொடர்ந்திடுவான்; பெரியாரைத் துணைக்கொள்வான்; பேரறிஞர் வழிசெல்வான் பெருமறவன் செழியனைப்போல் பிறிதொருவன் காண்போமோ?' என்று நம் 'ரோமாபுரிப் பாண்டியன்' அருஞ்செயலைக் கேட்டுப் பாண்டிய மண்டலம் மட்டுமின்றித் தமிழகம் முழுவதுமே அகங் குளிர்ந்து மனம் மகிழ்ந்து வாழ்த்துப்பா இசைத்திட்டது. பாண்டிய வேந்தனாக ஆவதற்கு முன்பே பாவேந்தனாகப் புகழ் குளித்திட்ட இளம்பெருவழுதியோ உணர்ச்சிப் பிழம்பாகவே மாறி, செழியனின் பரந்த உள்ளத்தினைச் சிறந்த நயத்துடன் உள்ளடக்கி, அடியிற் காணும் ஓர் அற்புதமான - ஆழ்ந்த தத்துவம் உள்ள - அழ கெலாம் ஒளிர்கின்ற - ஒரு தமிழ்ப்பாவினைப் பாடிக் களித்திட்டான். அதனைச் செழியனின் காலங்கடந்த புகழ்க் கோவிலுக்குக் காணிக்கை என்றும் நாம் போற்றிடலாம். 'உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமிய ருண்டலும் இலரே; முனிவிலர் துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழ் எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்