பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கலைஞர் மு. கருணாநிதி


தண்ணீரைக் கையில் அள்ளி முகத்தில் ஊற்றிக் கொண்டான். பிறகு எழுந்து நடந்தான்.

வெகுதூரம் நடந்து காட்டுக்குள்ளே சென்று மறைந்த இருங்கோவேள், ஓர் உயர்ந்த குதிரையில் ஏறிக்கொண்டு தன் மரமாளிகை நோக்கி விரைந்தான். மர்ம மாளிகையின் வாயிலிலே நின்ற வீரர்கள் குதிரையைப் பிடித்துக்கட்டி அதற்கான உபசரணைகளைச் செய்தார்கள்.