பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

23

வேண்டும். தானும் திருந்த வேண்டும் என்ற எண்ணம் பிடாரன் பெட்டிக்குள்ளே உள்ள பாம்புபோல அடங்கியும் சீறிக் கொண்டும் இருந்தது. எனவே, அவருக்கு வழக்கமாகிவிட்ட தீய பழக்கங்களை அவரால் கைவிட முடியவில்லை.

ஆனால், ஒரு நல்ல பழக்கம் அவரிடம் இருந்து வந்தது. என்ன தடைகள், குறுக்கீடுகள் ஏற்பட்டாலும், அன்றாடம் நடக்கும் அவரது நிகழ்வுகளை நாட்குறிப்பாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே வருவது தான், அந்த நல்ல பழக்கமாகும். தான் சாகும் வரை இந்தப் பழக்கத்தை அவர் மறவாமல் கடைப்பிடித்து வந்ததால், அந்த நாட்குறிப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் பிற்காலத்தில் அச்சாகி புத்தகமாக வெளிவந்தது. அதை இன்றும் படிக்கலாம். அதைப் படிப்போருக்கு மட்டும்தான்்டால்ஸ்டாயின் இளமைப்பருவ, மாணவர் பருவ மனப்போக்கையும், மன வளர்ச்சியையும் புரிந்து கொள்ள முடியும்.

1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்...

நான் எனக்குள் பல மாறுதல்களைச் செய்து கொண்டேன். படிப்பில் நான் வெற்றிபெற விரும்பும் முன்னேற்றங்களை இதுவரை அடைய முடியவில்லை. நான் செய்ய விரும்புவதைத்தான் செய்கிறேன். ஆனால், இதை செம்மையாக செய்ய முடியவில்லை. அதற்கு நான் எனது நினைவுச் சக்தியை நன்றாகப் பயன்படுத்தவில்லை. இதற்காகச் சில விதிகளைத் தயாரித்துக் கொள்கிறேன். இந்த நாட்குறிப்பின் படி நடந்தால் எனக்கு மிகுந்த நம்பிக்கையான நன்மை ஏற்படும் என்று நம்புகிறேன். இங்கே நான் என்பது மாணவன் டால்ஸ்டாயைக் குறிப்பதாகும்.

1. ஒருவன் எடுத்துக் கொண்ட காரியத்தை தடையின்றி முடிக்க வேண்டும்.