பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

43

அந்த நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு:

“எட்டு மணிக்கு ஆசிரியர் மணியடிக்கச் சொல்கிறார். மணியடித்துச் சிறிது நேரமானதும் அந்தக் கிராமத்துக்கும் பள்ளிக்கும் இடையில் உள்ள இடைவெளியில் சிறுவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பனிக்கும் மழைக்கும் கவலைப்படாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சரியான நேரத்தில் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் வரிசை வரிசையாக இருவர் மூவருடன் அணிவகுத்து வந்தார்கள். இதனால், ஆடு மாடுகளைப் போல ஒருவரை ஒருவர் மோதி தள்ளி, கட்டிப்பிடித்து ஓடிவரும் இழிவான நிலைகள் நீங்கின. பள்ளி மாணவர்கள் இடையிலே பள்ளி ஒழுக்கங்கள் வளர்ந்தன.

மாணவர்கள் இதுவரை கற்றக் கல்வியினால் அவர்களுடைய தனித் தன்மை அதிகமானது. புத்தகங்களையோ நோட்டுக்களையோ மூட்டை போல முதுகுகளிலே சுமந்து வரும் பழக்கம் ஒழிந்தது. அவர்களுக்கு கல்வி சம்பந்தமான வீட்டு வேலையையும் பிற பணிகளையும் செய்யச் சொல்வதில்லை.

ஏன் வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்று மாணவர்களைப் பள்ளியாசிரியர்கள் மிரட்டுவதோ அடிப்பதோ என்ற பழக்க வழக்கங்கள் இல்லை. நேற்று பள்ளியில் கிடைத்த கல்வியின்பம் இன்றும் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டே பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். நேரம் கழித்துத் தாமதமாக அவர்கள் வந்தால்; அதற்காக அவர்களுக்குத் தண்டனை தரும் வழக்கம் இல்லை. அதற்காகக் காலம் கழித்தே வரலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் வளர்ந்ததில்லை. சில நேரங்களில் பெரிய மாணவர்களில் சிலர், அவர்களது வீட்டில் சில வேலைகள் காரணமாக பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து விடுவார்கள்; ஆனால் ஒன்று,