பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

54

பிள்ளைகள் தொடர்ந்து தவறுகளைக் செய்தால், பிள்ளைகளிடம் பேசாமல் அவர்கள் திருந்தும் வரை பகிஷ்கரிப்பார்!

எழுத்துலக ஞானியான லியோ டால்ஸ்டாய் தனது பண்ணைப் பணிகளிலே ஈடுபட்டுக் கடுமையாக உழைப்பார்; வயலுக்குச் செல்வார்; மண்வெட்டி ஏந்தி வரப்புகளை அமைப்பார், வயல்களைக் கொத்துவார், களை எடுப்பார், நீர் பாய்ச்சுவார், பயிரிடுவார், தோட்டப்பாத்திகளைக் கட்டுவார்; பிறகு அறுவடை செய்வார்; இப்படிப் பட்ட பணிகளை அவர் செய்யும் போது தனது குழந்தைகளையும் உடன் சேர்த்துக் கொண்டு வேலைகளைச் செய்வார்.

இவ்வளவு இடைவிடாத வேலைகளுக்கு இடையிலேயும் தனது குடும்பத்துக்கான பணிகளையும் மனைவியுடன் சேர்ந்து கொண்டு களைக்காமல் செய்வார்! மனைவியின் வேலைகளாயிற்றே என்று அவரும் கணவன் காரியங்களாயிற்றே என்று மனைவி பேஹரும் அவர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வு பாராமல் குடும்ப சமத்துவத்தோடு, ஒருவருக்கொருவர் உதவிகளைச் செய்து கொள்ளும் பண்புடன் குடும்பக் கடமைகளைச் செய்து கொள்வார்கள்.

இந்நிலையில் எல்லா வேலைகளையும் தொடர்ந்து வந்து வந்த டால்ஸ்டாய் பெருமகன், தனது இலக்கியச் சேவைகளையும் தொய்வின்றிச் செய்துவந்தார். எந்த சேவைகளை எப்போது செய்ய வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரித்துக் கொண்டு, அந்தக் காலத்திற் கேற்ற படி தவறாமல், அந்தந்தப் பணிகளை அந்தந்த நேரத்தில் செய்து கொண்டே இலக்கியப் பணியை இடைவிடாமல் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்க ஒரு செயலாகும்.

இவ்வாறு காலக் கிரமப்படி பணி செய்து கொண்டே வந்த உழைப்பாளியான மேதை டால்ஸ்டாய், பதினெட்டு ஆண்டு