பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

53

வாழ்க்கை வாழ்ந்து தனது வேலைகளைத்தானே செய்து கொண்டு தன் கையே தனக்கு உதவி என்று நம்பி அவரது பணிகளைப் பிறர் உதவியின்றித்தானே செய்து கொண்டாரோ, தனது குடும்பப் பணிகளிலே எப்படிப் பொறுப்புடன் கடமையாற்றினாரோ- அதே போலவே, அண்ணல் காந்தியடிகளும் டால்ஸ்டாய் பெருமகளைப் பின்பற்றி நடந்து காட்டினார்!

மேற்கண்ட சான்றுகள் போல, மேலும் பல எடுத்துக் காட்டுக்கள் காந்தியடிகள் வாழ்விலே ஒளிவிடுவதால்தான், டால்ஸ்டாயை அண்ணல் தனது வழிகாட்டி என்று பகிரங்கமாக பெருமையுடன் குறிப்பிட்டும் அவர் வாழ்ந்து காட்டியும் புகழ்பெற்றார்.

இதற்கிடையே ஞானி லியோ டால்ஸ்டாய் ஓய்ந்து விடவில்லை, மேலும் தொடர்ந்தார் தனது எழுத்துப் பணிகளை. “க்ரூசர் சோனடா” என்ற வேறொரு குறு நாவலை எழுதினார். அந்தச் சிறு நாவலும் இலக்கிய உலகின் விண்மீனாக இன்றும் ஒளிவீசுவதால், இலக்கிய உலகம் அதனையும் போற்றிக் கொண்டே இருக்கின்றது.