பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

61

கல்வியைக் கொண்டு அவர்கள் வேலை தேடிக் கொள்ள முடியும். சமுதாயத்தில் அந்தப் பெண்களும் மற்ற மங்கையர்களைப் பார்த்து, நாமும் ஒருவன் ஒருத்தி என்ற பண்பாட்டுக்கேற்றவாறு மானத்தோடு வாழ்வோம் என்ற எண்ணம் அவர்களுக்கும் வரத்தானே செய்யும்? எனவே, உடனடியாக இரண்டாவது பிரிவினருக்குரிய கல்வியையும் அரசுதான் கொடுக்க வேண்டும்! இல்லையா?

மூன்றாவது வகையினரான குழந்தைகளுக்கு அவரவர் என்ன படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதற்கேற்றவாறு கல்வி கற்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசும் அதற்கேற்ற வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பிறகு, அக் குழந்தைகள் உரிய பருவமடைந்ததும் இந்த நாட்டையே ஆளும் அரசனாக, அமைச்சனாக, உலகம் போற்றும் மேதையாக, அறிவியல் வித்தகனாக வர வாய்ப்பு இருக்கும் - இல்லையா?

சமுதாயத்தில் நிறைந்துள்ள, பரவியுள்ள தீமைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? பணம் தானே அடிப்படை? என்ற முடிவுக்கு டால்ஸ்டாய் வந்தார். அந்தப் பணம்தானே பொய்யை மெய்யாக்குகிறது; மெய்யைப் பொய்யாக்குகின்றது; எவ்வளவு பெரிய இமாலய உயர மோசடிகளைச் செய்தாலும் பணம் அதன் சிகரத்தைக் கூடத் தகர்த்தெறிந்து விடுகிறது; எப்படிப்பட்ட அதிகாரப் போதைகளைக் கூட பணம் தெளியவைத்து விடுகின்றது; மிகப் பெரிய பலசாலிகளாக இருந்தாலும்; பணம் அவர்களை ஒடுக்கிவிடப் பயன்படுகிறது என்பதை அனுபவித்துணர்ந்த ஞானி டால்ஸ்டாய், ‘இனி நாம் செய்ய வேண்டியது யாது?’ என்ற தனது புத்தகத்தில் பணத்தின் கேடுபாடுகளை விபரமாக விளக்கியுள்ளார்.

எனவே, ‘இதுவரை செய்த தீச்செயல்களுக்காக வருந்துங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்; ஏழைகளின்