பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பஞ்ச நிவாரண நூல்; ருஷ்ய அரசால் பறிமுதல்!

ருஷ்ய நாட்டில், குறிப்பாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதி வாழ் மக்கள் மீது டால்ஸ்டாயிக்குத் திடீரென்று ஏற்பட்டதல்ல இரக்கமும் - அனுதாபமும்! அவர் பல்கலையிலும் கல்லூரியிலும் படித்தபோது வந்த மனித நேயக் கருணையாகும்!

கல்விப் பருவத்திலே உருவானது அந்த மக்கள் தொண்டு தன்னால் இயன்ற சேவைகளைச் செய்திட ஊர் ஊராக அலைந்து மக்களது நிலைகளை விளக்கிக் கூறி நிதி திரட்டியவர்!

தானிய வகைகளைச் சேகரித்து அவற்றை மூட்டைகளாகக் கட்டித் தன் முதுகிலேயே சுமந்து கொண்டு வந்து பஞ்ச நிவாரண வேலைகளைச் செய்து ஏழைகளின் ஏந்தலாக வாழ்ந்தவர். ஏறக்குறைய லட்சக் கணக்கான ரூபாயைத் தனியொரு மனிதனாக அலைந்து சேகரித்த ஏழை பங்காளர் அவர்.

ருஷ்ய மக்கள் இந்தியர்களைப் போல விவசாயத் தொழிலை நம்பி வாழ்பவர்கள். இயற்கையின் பருவகாலச் சக்தி பொய்த்துப் போனதால், மழை பொழியாததால் அங்குள்ள கிராமங்களின் வயல்கள் வறண்டு போயின. மக்கள் பசியால் மடிந்தார்கள்! 1891-ஆம் ஆண்டில் பயிர்கள் எல்லாம்