பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

69

டால்ஸ்டாயின் மனைவி வெளியிட்ட வேண்டுகோளை பத்திரிக்கைகளும் பெரிய அளவில் வெளியிட்டன. பத்திரிக்கையைப் படித்த பெண்கள், தாராளமாகவும், ஏராளமாகவும் அவரவர் வீடுகளிலே உள்ள உணவுப் பொருட்களை வழங்கினார்கள். இவ்வாறு; கும்பல் கும்பலாகப் பெண்கள் அந்தந்த ஊர் கிராம உணவு விடுதிகளுக்கு வருகை தந்து, உணவு தயார் செய்து அவரவர் கைகளாலேயே அன்னதானம் செய்வதைக் கண்ட சீமாட்டிகளும், பணக்காரிகளும் முன்வந்து அளவுக்கு அதிகமாக உதவிகளைச் செய்தார்கள்.

கிராமங்களில் இருந்த உணவு விடுதிகள் இரு நூற்றைம்பதாக உயர்ந்தது. பஞ்ச நிவாரண உணவை உண்டு வந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரமாக உயர்ந்தது.

ஆலை முதலாளிகள், வேறு வகையான தொழிலதிபர்கள் ஒன்று கூடி, குடியானவர்களை அழைத்து, வேலைகளையும் கொடுத்து கூலிகளையும் வழங்கினார்கள். இந்தப் பஞ்ச நிவாரணப் பணியில் நாட்டை ஆண்டு கொண்டிருந்த ருஷ்ய அரசாங்கமே முன்வராத போது, தனியொரு குடும்பமான டால்ஸ்டாய் குடும்பம் முன்வந்து பணியாற்றியதைக் கண்ட ரேயசா நகர்ப் பகுதி மக்கள் டால்ஸ்டாயையும், அவரது உறவினர்களையும், குடும்பத்தையும் பாராட்டினார்கள்.

இந்தப் பாராட்டுக் கூட்டத்தில் டால்ஸ்டாயோ அவரது குடும்பத்தினரோ எவரும் கலந்து கொள்ளாமல், நிவாரண வேலைகளிலேயே மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், டால்ஸ்டாய் சமாரா நகர் பகுதியிலே 1873- ஆம் ஆண்டில் வாழ்ந்த போது ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சக் கணக்கான பணம் திரட்டியும், தானிய வகைகளையும் மக்களுக்கு வழங்கியதற்காக, நன்றி தெரிவிக்கும் வகையில், அங்குள்ள மக்களில் நூற்றுக் கணக்கான பேர்கள் ரேயசா பஞ்ச