பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டால்ஸ்டாயின் 80-வது ஆண்டு விழா

னித நேய மகான் டால்ஸ்டாயிக்கு எண்பதாவது வயது பிறந்த நாளை ருஷ்ய மக்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். ஆனால் ஜார் மன்னனது ஆட்சி அந்த விழா நடைபெற விடாமல் தன்னால் இயன்ற தடைகளை எல்லாம் செய்தது. பொது மக்கள் அந்தத் தடைகளை மதிக்கவில்லை.

வயது முதிர்ந்து விட்ட ஒரு மூதறிஞர் விழாவுக்கு அரசு தடை செய்வதா? என்ற மன எரிச்சலோடு அந்த விழாவை முன்னிட்டு ஊர்வலங்களையும், பொதுக் கூட்டங்கயையும் ருஷ்ய நாடெங்கும் மக்கள் விமரிசையாக நடத்தினார்கள். வீதிக்கு வீதி டால்ஸ்டாயின் அரும் பெரும் சமூக சேவைகளை விளக்கிப் பேச விழாக்களை நடத்தினார்கள் அவரால் எழுதப்பட்ட “இன்ப ஒளி” நாடகத்தை நடத்தி அதன் பெருமையைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

ருஷ்ய நாட்டிலே மட்டுமல்ல, ஐரோப்பாவிலே உள்ள நாடு நகரங்கள் எல்லாம் டால்ஸ்டாயின் பிறந்த நாளைப் பெருமையாக நடத்திப் போற்றின. தொழிலாளர்கள், பொதுமக்கள், மாணவமணிகள், பிரபுக்கள், அறிஞர்