பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

லியோ டால்ஸ்டாயின்

கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். வீட்டை விட்டு எங்காவது அவர்களுடைய பார்வையில் படாமல் போய்விடலாமா என்று அடிக்கடி யோசித்து வந்தார்.

வீட்டில் மனைவி மக்கள் நடந்து கொள்ளும் போக்கு அவருக்கு ஒத்துவரவில்லை. கணவன் தான் கூறுகின்றபடி நடக்க வேண்டும் என்பது அந்த அம்மையாரின் ஆசை. ஆனால், அவர் மனச் சாட்சி என்ன சொல்கின்றதோ அதற்கேற்ற படி நடந்து வந்தார். இதனாலே இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி ஏசிப்பேசி மன எரிச்சல் அடைந்து வந்தார்கள்.

டால்ஸ்டாய் எழுதிய புத்தக விற்பனை உரிமைகள் எல்லாம், தனக்கும் - தனது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவரது மனைவி அவரைக் கேட்டுத் தினந்தோறும் நச்சரித்தாள். ஆனால், அவர், தனது நூல்களது விற்பனைப் பணமெல்லாம் நாட்டின் ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டு என்று விரும்பினார்.

இதனால், கணவன் மனைவி இடையே சச்சரவுகள் வலுத்து. கலவரம், ரகளை, குடும்பப் போராட்டம், அக்கம் பக்கம் வாழ்வோர் பஞ்சாயத்து போன்ற அவல நிலைகள் உருவாகின.

தனது குடும்ப மானம் மற்றவர்களிடம் அடிபடுகின்றதே என்ற கோபம் டால்ஸ்டாயிக்கு மானம் போனாலும் பரவாயில்லை, பணம் தன்னிடமே இருக்கவேண்டும் என்ற பேராசைக் குணம் அவளிடம். ஆனாலும் மனைவியின் ஆணவத்துக்கும் ஆர்ப்பாட்ட ஆத்திரத்துக்கும் சண்டை சச்சரவுக்கும், அழுகுரல் ஒப்பாரிக்கும் டால்ஸ்டாய் அடிபணியவில்லை. இதனுடைய உச்சக்கட்டமாக அவள்