பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

லியோ டால்ஸ்டாயின்

இந்த இயேசு சபைகளை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் இஞ்ஞாசியார் என்பவராவார். அவர் ஒரு போர் முனை வீரர். உலகையே ஆட்சி புரிகிற ஓர் உயர்ந்த வீரனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர்.

ஒரு முறை அவர் எதிரிகளோடு போர்முனையில் யுத்தத்தில் ஈடு பட்டிருந்தபோது காலில் குண்டு பாய்ந்து மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டு தனது காலில் பாய்ந்த குண்டை வெளியே எடுப்பதற்கு அறுவைச்சிகிச்சை செய்து கொண்டார். அப்போது மருத்துவமனையில் பொழுது போக்குவது எப்படி என்று புரியாத நிலையில் அந்தப் புத்தகத்தை எழுதினார். அந்த நூல் தான் இயேசு மதத் தொண்டுகளை உலகிலே பரப்பிடக் காரணமாக அமைந்தது.

அது போலவே டால்ஸ்டாய் ஒரு போர் முனைவீரர்தான். ஆனால் இஞ்ஞாசியாருக்கும் அவருக்கும் ஒரே ஓர் வித்தியாசம் காணப்பட்டது. ஜார் மன்னனது ஆட்சிக் கொடுமைகளை எதிர்த்து தனது நாட்டு மக்களை எப்படி வாழவைப்பது என்று யோசித்தபோது, அவரது அனுபவத்தாலும், தாய் நாட்டுப் பற்றாலும், மக்களுடைய மானிதாபி மானத்தாலும் அவருக்குண்டான எழுச்சிதான் ‘எ சைக்கிள் இன் ரீடிங்’ என்ற புத்தகமாகும். அதனால்தான் அவர் எழுதிய இந்த நூல் அவருக்கு மன நிறைவைத் தந்ததுடன், இந்த நூல் எனக்குப் பிறகும் வாழும் என்று அவரே குறிப்பிட்டிருந்தார். அத்தகைய ஒரு சமுதாய மறுமலர்ச்சி நூலாக அது அமைந்தது எனலாம்.

இந்த அரும் பெரும் நூலை எழுதி முடித்த பின்பும் கூட, அவரது மனைவியும், பிள்ளைகளும் டால்ஸ்டாயின் கொள்கைக்கு நேர்விரோதமாக, மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே, வீட்டை விட்டு வெளியேறுவது என்ற தனது முடிவுக்கு மீண்டும் அவர் தள்ளப்பட்டார். இருந்தும் கூட, தாம் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் தனது