பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

லியோ டால்ஸ்டாயின்

எல்லாம் விட்டு விட்டு, அதாவது துறவு பூண்டு செல்ல வேண்டும் என்பதே அந்த விருப்பமாகும்.

இதற்குக் காரணங்கள் பல உண்டு. வயத ஏற ஏற வாழ்க்கை எனக்கு மிகவும் வேதனையைத்தான் உண்டாக்கி வருகிறது என்பதே முதல் காரணம். தனிமையில் வாழ வேண்டும் என்ற விருப்பம் அதிகமாகி வருகிறது. நமது பிள்ளைகள் எல்லோரும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். இனி நான் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியமல்லை.

உங்களது உள்ளத்தைக் கவர எவ்வளவோ விஷயங்கள் தோன்றியுள்ளன என்பது இரண்டாவது காரணம். இவை போன்ற எண்ணங்களால் எனது துறவு உனக்குத் துன்பமாய் இராது.

இந்துக்கள் அறுபதாம் வயதில் காட்டுக்குச் சென்று, வயோதிக வயதில் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கடைசி நாட்களைக் கடவுள் சிந்தனையில் கழிக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அந்த நாட்களை விளையாட்டிலும், வம்படிப் பேச்சிலும் வீணாகக் கழிக்க விரும்புவதில்லை. ஆகையால் எழுபது வயதை அடைந்த நான் அமைதியையும் தனிமையையும் காண விரும்புகிறேன்.

“என் வாழ்க்கையை நான் எனது எண்ணத்தின் படி வாழ முடியாவிட்டாலும் கூட, நான் வாழும் முறைக்கும் எனது அறநெறிகளுக்கும் இடையில் அதிகமான வித்தியாசம் இருப்பதை நான் விரும்பவில்லை.

“என்னுடைய இந்த நோக்கத்தை நான் வெளிப்படையாகக் கூறினால் எல்லோரும் என்னிடம் கெஞ்சிக் கூத்தாடி, மன்றாடி எனது லட்சியத்தைத் தடை செய்ய நினைப்பார்கள். அந்தத் தடை எனது குறிக்கோளைப் பலவீனப் படுத்து வதாகவும் அமையலாம்.”