பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
viii



    பரப்பில் இனிய குளிர்ந்த தெளிவான நீர் தரும் சுனையென இதைக் காண்பார்கள். டால்ஸ்டாய் என்ற அரும் மனிதர் சமுதாயம் என்ற பெரிய சக்திக்கும் சுயநலமே உருவெடுத்தாற் போன்ற அவர் மனைவி சோன்யாவிற்கும் இடையே அகப்பட்டுக் கொண்டபோரை இந்த நூலில் காண்பார்கள். நாடகத்தின் உயிர்நாடி இந்தப் போர். சிக்கனத்துடனும் அழகுடனும் இது சித்திரிக்கப்பட்டுள்ளது. டால்ஸ்டாயின் உன்னதப் பணி முடிந்து அவர் வாழ்வு அடங்கும்போதும் அந்தப் போர் முடியாத ஒரு போர் என்ற உணர்வை எழுப்பித் திரைக்கு வழிவிடுகிறார் திரு. சமுத்திரம். கடைசிக் காட்சியில் லியோ டால்ஸ்டாயின் இறுதி மொழிகளில் சில இவை:
    ’லியோ டால்ஸ்டாய்க்குக் கால் பிடிக்கக் காஷா... உடம்பைப் பிடிக்க ஓஸோலின்... மடியில் கிடத்த மகள்... மடிவதைப் பார்க்க விரும்பாத செர்ட்கோவ்... என்னைத் திருத்துவதற்கு மத குரு... போட்டோ கிராபர்கள்... பத்திரிகையாளர்கள்... (கோப மாக) இந்த ஒரு டால்ஸ்டாய்க்கு இத்தனைப் பேரா? இந்த உலகில் இலட்சோப இலட்சம் மக்கள் இருக்கிறார்கள், உண்ண உணவு இல்லாமல், உடுக்க உடை இல்லாமல், இந்த ஒரு டால்ஸ்டாய்தான் உங்களுக்கு ஒசத்தியா? இவன்மட்டும்தான் உங்களுக்கு முக்கியமா?’